பூரியில் உள்ள இஸ்கான் சமையலறைக்கு சென்ற கௌதம் அதானி.. ஜெகன்நாதர் கோயிலில் சேவை செய்தார்
புவனேஸ்வர்: புனித ஜெகன்நாதர் ரத யாத்திரையின் போது, அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, பூரியில் உள்ள இஸ்கான்- அதானி மெகா சமையலறைக்கு வருகை தந்து, நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களுடன் இணைந்து சேவையில் ஈடுபட்டார். அவருடன் அவரது மனைவி டாக்டர் ப்ரீதி அதானி மற்றும் மகன் கரண் அதானி ஆகியோரும் உடன் இருந்தனர்.
இஸ்கான் மற்றும் அதானி குழுமம் இணைந்து இந்த மெகா சமையலறை முன்னெடுப்பைச் செய்துள்ளது. இதன் மூலம் தினமும் லட்சக்கணக்கான பக்தர்களுக்குப் புனிதமான சைவ உணவு பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு கும்பமேளாவில் செய்ததைப் போன்ற ஒரு கூட்டு முன்னெடுப்பாக இதைச் செய்துள்ளனர்.. இந்தியாவின் ஆன்மீக மற்றும் கலாச்சாரச் சேவை மரபுகளுக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

கௌதம் அதானியின் தன்னார்வத் தொண்டு
சமையலறைக்கு வந்த கௌதம் அதானி சமையலறை பணிகளில் சிறிது நேரம் பங்கேற்க வேண்டும் என அப்போது தன்னார்வலர்கள் அன்புடன் அழைத்தனர். அவரது பாதுகாப்பு குழுவினர் முதலில் தயக்கம் காட்டிய போதிலும், அங்கு உழைக்கும் சமையலறை குழுவினருக்கு உற்சாகம் தரும் வகையில் அவர் ஒப்புக்கொண்டார். அவர் சிறிது நேரம் பூரி சூட்டு, சப்ஜி செய்தார். அதானியின் இந்தச் செயல் ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.
டாக்டர் ப்ரீதி அதானியும் இந்தச் சேவையில் பங்கேற்றார். அவர் ஒரு பெரிய சமையல் பாத்திரத்தை (கமாச்சா) தூக்க முயன்றபோது, கரண் அதானி அவருக்கு உதவ முன்வந்தார். குடும்பத்தின் பரஸ்பர அக்கறையையே இது பிரதிபலித்ததாக அங்கிருந்தவர்கள் கூறினர்.
இஸ்கான் பிரதிநிதி
இது குறித்து இஸ்கான் பிரதிநிதி ஒருவர் கூறுகையில், "அதானி குடும்பத்தினரின் சேவையை அங்கிருந்த பக்தர்கள் தன்னார்வலர்கள் பார்த்தனர். உண்மையாகவே இதை நாம் பாராட்டியே தீர வேண்டும்" என்றார்.
அதானி குடும்பத்தின் இந்தச் செயல் சமையலறை குழுவினருக்கும் உற்சாகம் தருவதாக இருந்தது. இது குறித்து இஸ்கான் நிர்வாகம் கூறுகையில், "கௌதம் அதானியின் சமையலறைக்கு வந்தது மட்டுமல்லாமல், அங்குச் சிறிது நேரம் வேலை செய்தது, எங்கள் உற்சாகத்தைக் கொடுப்பதாக இருந்தது. உண்மையான பெருமை என்பது பதவியில் இல்லை, சேவையில்தான் இருக்கிறது என்பதை அவர் எங்களுக்கு நினைவூட்டினார்" என்றனர்.
இஸ்கானின் பாராட்டு
இஸ்கான் மேலும் கூறுகையில், "அதானி குடும்பத்தின் இந்தச் செயல், கலாச்சார மற்றும் பக்தி சேவைக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது என்று நாங்கள் நம்புகிறோம். அவர்களின் இந்தத் தன்னலமற்ற சேவை மற்ற தொழிலதிபர்களையும் ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் ஈடுபடவும், அதை ஆதரிக்கவும் ஊக்குவிக்கும்" என்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஒடிசா மாநிலத்தில் நடக்கும் பூரி ரத யாத்திரைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். அப்போது, இதுபோன்ற முன்னெடுப்புகள் ஆன்மீக உணர்வுக்கு ஏற்ப விருந்தோம்பலாக இருக்கும்.
-
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்!












Click it and Unblock the Notifications