ரூ.1,750 கோடி லஞ்சம் தருவதாக உறுதி! ஜெகன்மோகனை சந்தித்து பேசிய அதானி.. அமெரிக்கா பகீர் தகவல்

Subscribe to Oneindia Tamil

அமராவதி: 2021ல் அப்போதைய ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை, தொழிலதிபர் கவுதம் அதானி சந்தித்து பேசியுள்ளார். அப்போது ரூ.1,750 கோடி லஞ்சம் தருவதாக ஜெகன்மோகன் ரெட்டியிடம், கவுதம் அதானி உறுதியளித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை கமிஷன் குற்றம்சாட்டியுள்ளது.

நம் நாட்டில் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருப்பவர் கவுதம் அதானி. இவர் உலக பணக்காரர் வரிசையில் 17 வது இடத்தில் உள்ளது. கவுதம் அதானி குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். கவுதம் அதானி துறைமுகம், எரிசக்தி உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

adani gautam adani jagan mohan reddy business

சமீபத்தில் ஹிண்டர்ன்பர்க் அறிக்கை கவுதம் அதானி மீது பகிரங்கமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. கவுதம் அதானி தனது நிறுவன பங்குகளின் மதிப்புகளை உயர்த்தி காட்டி மோசடி செய்ததாக ஹிண்டர்ன்பர்க் அறிக்கை தெரிவித்தது.

இதன் தொடர்ச்சியாக தற்போது அமெரிக்காவில் பரபரப்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதோடு அமெரிக்கா நீதிமன்றம் கவுதம் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. அதாவது நம்நாட்டில் சூரிய ஒளி (சோலார்) மின்சார ஒப்பந்தம் பெற அதானி நிறுவனம் ரூ.2,200 கோடியை பல்வேறு வகைகளில் லஞ்சமாக கொடுத்துள்ளார். இதனை மறைத்து அமெரிக்காவில் இருந்து முதலீடுகளையும் அதானி பெற்றுள்ளதாக நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றப்பத்திரிகையில் கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர்கள் உட்பட 7 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. அதோடு அதானியிடம் இருந்து பணம் பெற்றவர்களின் பட்டியலில் ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. அதாவது மத்திய அரசின் சார்பில் எஸ்இசிஐ எனும் Solar Energy Corporation of India என்ற பொதுத்துறை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், அதானி நிறுவனம் முக்கிய ஒப்பந்தங்களைப் போட்டுள்ளன. இந்த திட்டங்களுக்கு அதானி குழுமம் அமெரிக்காவில் இருந்து ரூ 20,000 கோடிக்கு முதலீடுகளைப் பெற்றுள்ளன.

பணம் பெற்றவர்களின் பட்டியலில் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் பெயரும் இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருந்தபோது அதானி நிறுவன மின்சாரத்தை அதிக விலைக்கு வாங்கினால் ரூ.1,750 கோடி தருவோம் என அதானி நிறுவனம் டீல் பேசியதாக சொல்லப்பட்டுள்ளது. இதையடுத்து 2021ல் ஆந்திராவின் அப்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை, தொழிலதிபர் கவுதம் அதானி சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது தங்களிடம் இருந்து மின்சாரத்தை வாங்கி கொள்ள ஒப்பந்தம் செய்யும்படி வலியுறுத்தி உள்ளது. மேலும் இந்த ஒப்பந்தம் மேற்கொண்டால் கைமாறாக இன்செட்டிவ் தருவதாக கூறியுள்ளார். இதுதவிர அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளதோடு, லஞ்சம் தருவதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.1,750 கோடியாகும் என்று அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை கமிஷன் (SEC or The United States Securities and Exchange Commission)எனும் ஏஜென்சி உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தான் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛‛கடந்த 2019 முதல் 2024ம் ஆண்டு வரை அதானி மற்றும் ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சி இடையே நேரடி ஒப்பந்தம் எதுவும் செய்யப்படவில்லை. எஸ்இசிஐ நிறுவனம் 2021ம் மின்வினியோக நிறுவனம் இடையே தான் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

உண்மையில் அதானி குழுமத்துக்கும், ஆந்திராவின் ஜெகன்மோகன் ரெட்டி அரசுக்கும் நேரடி ஒப்பந்தம் என்பது இல்லை. எஸ்இசிஐ மற்றும் மின்விநியோக நிறுவனங்களுக்கு இடையே தான் ஒப்பந்தம் என்பது இருந்தது. தற்போதைய குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் ஆளும் கட்சியான முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. தற்போது தான் குற்றச்சாட்டு வந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்து கருத்து தெரிவிப்பதாக தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+