காஷ்மீர் அமைச்சர்களுக்குப் பணம் கொடுத்ததற்கு கணக்கு உள்ளது - வி.கே.சிங்

Subscribe to Oneindia Tamil

Gen VK Singh says money transcations were accounted for in J&K
குர்கான்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சமூக வளர்ச்சிக்காக ராணுவத்தின் ரகசிய நிதியிலிருந்து பணம் கொடுத்ததற்கு முறையான கணக்குகள் உள்ளன என்று முன்னாள் ராணுவத் தளபதி வி.கே.சிங் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து வி.கே.சிங் குர்கானில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் மாநில அமைச்சர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது உண்மைதான். அந்தக் கருத்தில் எனக்கு எந்த மாற்றமும் இல்லை.

ஆனால் அந்தப் பணத்தை சமூகத்தின் வளர்ச்சிக்காகவும், அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுக்காகவும்தான் கொடுத்தோம். அமைதியை ஏற்படுத்தவே இந்தப் பணம் செலவிடப்பட்டது.

கொடுக்கப்பட்ட அத்தனை பணத்திற்கும் உரிய கணக்குகள் பராமரிக்கப்பட்டன. அனைத்தும் முறையாக கண்காணிக்கப்பட்டன. அனைத்து நடைமுறைகளும், விதிமுறைகளும் பின்பற்றப்பட்டன. தவறான முறையில் இந்த விஷயத்தை அணுகுவது சரியல்ல. இது அமைச்சர்களுக்கு்க கொடுக்கப்பட்ட லஞ்சமாக பார்ப்பது தவறானது.

பிரிவினைவாத நிகழ்வுகளிலிருந்து மக்களைப் பிரித்து வர எடுக்கப்பட்ட முயற்சிகளுக்காகவே இந்தப் பணம் செலவிடப்பட்டது.

நாட்டுக்கு நல்லதாக இருக்கு்ம் விஷயம் குறித்து மட்டுமே நான் விவாதிக்க விரும்புகிறேன். தேவையில்லாதவை குறித்து நான் விவாதிக்க விரும்பவில்லை.

நாட்டின் நலனுக்காக ராணுவம் செய்து வரும் காரியங்களை இப்படி பகிரங்கமாக செய்தியாக்கியிருப்பது வருத்தம் தருகிறது. நமது புலனாய்வு அமைப்புகளும், உளவு அமைப்புகளும் செயல்படுவதை இப்படி பகிரங்கமாக தெரிவிக்க முடியுமா... இது மக்களை திசை திருப்பும் செயலன்றி வேறு எதுவும் இல்லை என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+