பற்றி எரியும் நேபாளம்.. அதிபர் உள்பட அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீவைப்பு.. இளைஞர்கள் வெறியாட்டம்
காத்மாண்டு: அண்டை நாடான நேபாளத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்கள் தடை செய்யப்பட்டன. இதனால் கோபமான இளம் வயதினர் நேற்று காத்மாண்டுவில் போராட்டத்தை தொடங்கினர். இது வன்முறையானது. இதையடுத்து சமூக வலைதளங்களுக்கான தடை நீக்கப்பட்டது. இருப்பினும் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. 2வது நாளாக இளம் வயதினர் தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த நாட்டின் அதிபர் உள்பட பல அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டு வரும் நிலையில் நேபாள பிரதமர் சர்மா ஒலி ராஜினாமா செய்தார்.
நம் நாட்டின் அண்டை நாடாக நேபாளம் உள்ளது. இங்கு பிரதமராக இருப்பவர் சர்மா ஒலி. இந்நிலையில் தான் திடீரென்று பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்பட 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதாவது சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில் நேபாள அரசு கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றாத சமூக வலைதளங்கள் தடை செய்யப்பட்டன. இதற்கு இளம் வயதினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்ப பெற வேண்டும் என்று கூறினர். ஆனால் அரசு கேட்கவில்லை. இந்நிலையில் தான் நேற்று நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இளம் வயதினர் ஏராளமானவர்கள் குவிந்து போராட்டம் நடத்தினர். நேபாள நாடாளுமன்ற வளாகத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைய முயன்றனர்.
2வது நாளாக போராட்டம் - வன்முறை
இதனால் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த போராட்டம் வன்முறையானது. 20 பேர் பலியான நிலையில் 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து சட்டம் - ஒழுங்கு பிரச்சனைக்கு பொறுப்பேற்று நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் ராஜினாமா செய்தார். அதுமட்டுமின்றி சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை அதிரடியாக நீக்கப்பட்டது.
இதையடுத்து போராட்டம் நிற்கும் என்று அரசு எதிர்பார்த்தது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. இன்று 2வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. இதுவும் வன்முறையாக மாறி உள்ளது. பிரதமர் கேபி சர்மா ஒலி ராஜினமா செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர். போராட்டக்காரர்கள் அரசியல்வாதிகளின் வீடு, அலுவலகங்களில் தீவைத்து வருகின்றனர். அந்த வகையில் நேபாளத்தின் அதிபர் ராம் சந்திர பவுடலின் வீட்டுக்கு தீவைக்கப்பட்டது.
அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீவைப்பு
அதேபோல் தகவல் தொடர்பு துறை அமைச்சரும், அரசின் செய்தி தொடர்பாளருமான பிரித்வி சுப்பா குரங்கின் வீட்டுக்கு தீவைக்கப்பட்டது. அதேபோல் சிபிஎன் மாவோயிஸ்ட் சென்டரின் தலைவர் புஷ்பா கமல் வீட்டுக்கு தீவைக்கப்பட்டது.
ஜானக்பூரில் உள்ள முன்னாள் துணை பிரதமர் ரகுவீர் மகாசேத்தின் வீட்டில் கல் வீசப்பட்டது. அதேபோல் நேபாள் காங்கிரஸ் தலைவர் செர் பகதூர் தியூபா வீடு, நயா பஜாரில் உள்ள கிர்திபூர் மாநகராட்சி அலுவலகம், நேற்று ராஜினாமா செய்த உள்துறை அமைச்சர் ரமேஷ் லேலாக் ஆகியோரின் வீட்டில் தீவைத்து எரிக்கப்பட்டது.
அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா
நேற்றைய தினம் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேலாக் ராஜினாமா செய்த நிலையில் 2 அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். இன்று விவசாயத்துறை அமைச்சர் ராம்நாத் அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதன்பிறகு சுகாதாரத்துறை அமைச்சர் பிரதிப் பால்டெல் ராஜினாமா செய்தார். இதனால் நேபாளத்தின் நிலைமை எல்லை மீறி சென்றுள்ளது. அங்குள்ள நிலைமையை பார்த்து ஐநா கவலை தெரிவித்துள்ளது.
ராஜினாமா - துபாய் பறக்கும் பிரதமர்
இதற்கிடையே தான் அமைச்சர்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வரும் நிலையில் இன்று மாலையில் அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி விவாதிக்கப்பட உள்ளது. இந்த கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே தான் பிரதமர் கேபி சர்மா ஒலி திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இளைஞர்களின் போராட்டத்துக்கு அவர் பணிந்து தனது பதவியை துறந்தார். மேலும் நாடு முழுவதும் வன்முறை பரவுவதால் அவர் பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக ஹிமாலயா ஏர்லைன்ஸ் எனும் தனியார் விமானம் ரெடியாக வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலைமை மோசமாகி வருவதால் அவர் மருத்துவ காரணங்களை கூறி துபாய் தப்பித்து செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications