ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு வழக்கு: கொல்கத்தாவில் முக்கிய குற்றவாளி கைது
கொல்கத்தா: புனேயில் பேக்கரியில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும், இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டான்.
கொல்கத்தா சிறப்பு போலீஸ்படை வங்கதேசத்தை சேர்ந்த ஜாகித் ஹுசைன் என்ற இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதியை நேற்று கைது செய்துள்ளது. கொல்கத்தாவின் சிட்பூர் பகுதியிலுள்ள ரயில் நிலையத்திற்கு இந்த தீவிரவாதி வந்தபோது போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

வங்கதேசத்தின் மிர்பூர் பகுதியை சேர்ந்த ஹுசைன், இந்தியாவில் செயல்படும் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவனாகும். வங்கதேசத்தில் இருந்து, வெடிமருந்து, கள்ள நோட்டு போன்றவற்றை இந்தியாவுக்கு சப்ளை செய்வது ஹுசைனுக்கு ஒதுக்கப்பட்ட வேலை.
புனேயில் உள்ள ஜெர்மன் பேக்கரியில், 2010ம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த குண்டு வெடிப்பில் இவனுக்கு தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பில், 9 பேர் படுகொலை செய்யப்பட்டனர், பலர், கை, கால்களை இழந்து படுகாயமடைந்தனர். ஜாகித் ஹுசைன் இன்று கொல்கத்தா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளான்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications