காதலியின் வீட்டு வாசலில் மனைவியை மானபங்கப்படுத்திய 'கஜினி' நடிகர் கைது
மும்பை: மும்பையில் தனது காதலியின் வீட்டு வாசலில் வைத்து மனைவியை மானபங்கப்படுத்திய இந்தி நடிகர் காலித் சித்திக்கி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்தி படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், விளம்பர படங்களில் நடித்து வருபவர் காலித் சித்திக்கி(41). இந்தி கஜினி படத்தில் ஆமீர் கானின் ஏர் வாய்ஸ் நிறுவனத்தின் மேனேஜராக நடித்தவர் காலித். காலிதும் அவரது மனைவி ராஹத்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்கள்.
அவர்களின் மகனும், மகளும் காலிதுடன் மும்பையில் வசித்து வருகிறார்கள். காலிதின் வீட்டிற்கு அருகே வசித்து வரும் ராஹத் தனது குழந்தைகளை வார இறுதி நாட்களில் பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஹத் காலித் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பாவது,
எனது மகன் கடந்த வார இறுதி நாட்களில் என வீட்டிற்கு வந்தபோது அவனது உடல்நலம் சரியில்லை. அதனால் அவன் கடந்த திங்கட்கிழமை பள்ளிக்கு செல்லவில்லை. நான் திங்கட்கிழமை குழந்தைகளை காலிதின் வீட்டில் விடச் சென்றபோது அவர் அங்கு இல்லை. அன்று இரவு அவரது கார் அவரின் காதலி வீட்டு வாசலில் நிற்பதை பார்த்தேன். அவருக்கு பல முறை போன் செய்தும் எடுக்கவில்லை. இது நடந்தபோது இரவு 2 மணி ஆகும்.
மகனுக்கு உடல்நலம் சரியில்லாதபோது காதலி வீட்டிலா இருக்கிறீர்கள் என்று நான் அவரின் காதலி வீட்டு வாசலில் நின்று கத்தினேன். இதையடுத்து ஒரு மணிநேரம் கழித்து கீழே வந்தவர் எனது கழுத்தை நெறித்ததுடன், என்னை மானபங்கப்படுத்தினார் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் காலை 6.30 மணிக்கு காலிதை கைது செய்து பின்னர் ஜாமீனில் வெளியே விட்டனர். இது வழக்கமான கணவன், மனைவி சண்டை என்றும், அவரை தான் மானபங்கபடுத்தவில்லை என்றும் காலித் தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications