'ஹோம் ஒர்க்' செய்யாததற்காக 6 வயது சிறுவனை இரும்பு 'ஸ்கேலால்' அடித்த ஆசிரியை...!
காஸியாபாத்: உ.பி. மாநிலம் காஸியாபாத் பகுதியில் வீட்டுப் பாடம் செய்யாமல் வந்ததற்காக 6 வயது மாணவனை அவனது வகுப்புஆசிரியை இரும்பு ஸ்கேலால் கடுமையாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளார். அந்த ஆசிரியையை தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர்.
அந்த ஆசிரியையின் பெயர் ஜோஷ்னா நிகாம். இவர் காஸியாபாத், விஜய் நகரில் உள்ள கிருஷ்ணா பப்ளிக் பள்ளியில் கடந்த 8 மாதமாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது வகுப்பில் பயிலும் 6 வயது மாணவன் ஒருவன் வீட்டுப் பாடம் செய்யாமல் வந்து விட்டதற்காக கையில் இருந்த இரும்பு ஸ்கேலால் சரமாரியாக அடித்துள்ளார்.
இதில் மாணவனின் முதுகு, தோள்பட்டை மற்றும் இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தக் கட்டும் ஏற்பட்டது. வீட்டுக்கு வந்த சிறுவன் தனது தாயாரிடம் அழுபடியே நடந்ததைக் கூறவே பெற்றோர் அதிர்ச்சி அடைந்து போலீஸில் புகார் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து போலீஸார் ஜோஷ்னாவைக் கைது செய்தனர்.
அவர் மீது ஐபிசி 323 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிறுவனின் தாயார் கூறுகையில் எனது மகன் வந்து சொன்னதும் அதிர்ச்சி அடைந்த நான் பள்ளிக்குச் சென்று அந்த ஆசிரியையிடம் இதுகுறித்துக் கேட்டேன். அதற்கு அந்த ஆசிரியை, வீட்டுப் பாடம் செய்யாமல் வந்ததால் அடித்தேன். மீண்டும் அதேபோல நடந்தால் நானும் மறுபடியும் அடிப்பேன் என்றார் என்று கூறினார்.
இதற்கிடையே, ஆசிரியை ஜோஷ்னா தனது தவறை உணர்ந்துள்ளார். கைது செய்யப்பட்ட அவர் கூறுகையில், நான் செய்த தவறை உணர்ந்து விட்டேன். நான் செய்தது எனக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. ஆனால் நான் இரும்பு ஸ்கேலால் அவனை அடிக்கவில்லை. சாதாரண குச்சியால்தான் அடித்தேன். இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications