ஜெ. மீதான பரிசுப் பொருள் வழக்கு: பிப். 5ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை
டெல்லி: முதல்வர் ஜெயலலிதா மீதான பரிசுப் பொருட்கள் வழக்கின் இறுதி விசாரணை வரும் 5ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
1996ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா ரூ.2 கோடி அளவில் பரிசுப் பொருட்களை பெற்றது குறித்து சிபிசிஐடி பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையை சிபிஐ மிகவும் தாமதப்படுத்தியதால் தனக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்யுமாறு ஜெயலலிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அவர் மீதான வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் கடந்த 2011ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இதையடுத்து கடந்த 2012ம் ஆண்டு சிபிஐ உச்ச நீதிமன்றத்தை அணுகியது. இந்த வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதி சி. நாகப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பிறகு விசாரிப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் 5ம் தேதி நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடக்க உள்ளது.
இதே அமர்வு தான் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கையும் விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications