15 வயது சிறுமி பலாத்காரம் செய்து எரிப்பு: 95% காயங்களுடன் உயிருக்கு போராட்டம்
டெல்லி: சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகின்ற வேளையில் அதற்கு முந்தைய நாளான நேற்றிரவு டெல்லியில் 15 வயதான சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவை ஒட்டியுள்ளது திக்ரி கிராமம். இங்கு வசிக்கும் 15 வயது சிறுமி மீது பக்கத்து வீட்டு வாலிபருக்கு நீண்ட நாட்களாக ஆசை இருந்துள்ளது.

இந்நிலையில், அந்த 15 வயது சிறுமியை அந்த வாலிபர் நேற்று வலுக்கட்டாயமாக தனிமையான பகுதிக்கு அழைத்து சென்று உள்ளார். பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்து தீ வைத்து உள்ளார்.
இதில் 95 சதவீதம் தீ காயம் அடைந்த சிறுமி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பலாத்காரம் செய்தவர் 18 வயதான அஜய் சர்மா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை 2:30 மணியளவில் சிறுமியின் அழுகுரல் மொட்டை மாடியில் கேட்டு உள்ளது. உடனடியாக அவரது பெற்றோர் மேலே சென்று பார்த்து உள்ளனர். சிறுமியின் மீது தீ பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சியுற்று அவரை காப்பாற்றி உள்ளனர். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளார்.
"சிறுமியின் வீட்டிற்கு நுழைந்த வாலிபர் அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தீ வைத்து விட்டார் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறி உள்ளனர். நாங்கள் மருத்து அறிக்கைக்காக காத்திருக்கிறோம். சிறுமிக்கு அதிக தீக்காயம் உடலில் உள்ளது" என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.
சிறுமிக்கு அந்த வாலிபர் பின் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் கடந்த வருடமே அவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டனர் பெற்றோர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. சிறுமியின் உடல் நிலையானது மோசமாக உள்ளது என்றே மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. "சிறுமியின் இரத்தத்தில் பாதிப்பு பரவுவதை தடுப்பதற்கு முயற்சி செய்து வருகிறோம். இது அவருடைய உடல் உறுப்புகளை செயல் இழக்க செய்யும்" என்று மருத்துவர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.
சிறுமி அனுமதிக்கப்பட்டு உள்ள மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். முன்னதாக, உயிருக்கு போராடி வருகின்ற சிறுமியின் வாக்குமூலமானது பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் திக்ரி கிராமத்தில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
