ராஜஸ்தானில் பலாத்காரத்தை தடுக்க முயன்ற சிறுமியை வெட்டிக் கொன்ற கொடூரன்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டவனை தடுத்த 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முற்பட்டவனே கோடரியால் வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள தோல்பூர் மாவட்டம், பசேடி பகுதியில் வசித்துவந்த அந்த சிறுமி நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது, அதே பகுதியில் வசிக்கும் விஷ்ணு தாக்குர் என்பவன் வீட்டினுள் நுழைந்து அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

அவனது செயலை கண்டு பதறிப்போன சிறுமி இதை தடுக்க முயன்று கூச்சலிட்டாள். அதனால் ஆத்திரமடைந்த அவன் வீட்டினுள் இருந்த கோடரியை எடுத்து அந்தப் பெண்ணை வெட்டிக் கொன்றான்.
மரண பயத்தில் அந்த சிறுமி அலறித்துடித்த சப்தம் கேட்டு விரைந்தோடிவந்த அக்கம்பக்கத்து வீட்டினர் ரத்தம் தெறிக்க கொடூரமாய் அங்கு நின்றிருந்த கொலையாளியை பிடித்து அடித்து, உதைத்து, கட்டிப்போட்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்துவந்த போலீசார் அவனை கைது செய்தனர். வெட்டுண்டு கிடந்த சிறுமியின் பிரேதத்தை பரிசோதனைக்கு அனுப்பிவைத்து இந்த கொடூர சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications