திருப்பதி மலைப்பாதையில் நடந்து சென்ற சிறுமி.. அடித்துக்கொன்ற சிறுத்தை .. பக்தர்கள் ஷாக்
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு பாதையாத்திரையாக அலிபிரி மலைப்பாதையில் சென்ற சிறுமியை சிறுத்தை தாக்கியதில் அந்த சிறுமி உயிரிழந்துள்ளார். கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த இடத்தில் சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் பக்தர்களை அச்சமடைய வைத்துள்ளது.
திருப்பதி திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையானை தரிசனம் செய்ய தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பேருந்து மூலம் மட்டுமல்லாது அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு பாதை வழியாக பாதையாத்திரையாக சென்றும் ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். பாதையாத்திரை செல்லும் பகுதி வனப்பகுதி என்பதால் அவ்வப்போது வன விலங்குகளும் வந்து செல்லும். சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி போன்ற விலங்குகளின் நடமாட்டமும் இருக்கும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கரடி ஒன்று அலிபிரி நடைபாதையை கடந்து சென்றது.

கடந்த ஜூன் மாதம் ஆந்திர மாநிலம், ஆதோனியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருப்பதி அலிபிரி மலைப்பாதை வழியாக திருமலைக்கு நடந்து சென்றுகொண்டிருந்தனர். இரவு சுமார் 10 மணியளவில், 7வது மைல் அருகே சிறுத்தை ஒன்று கவுசிக் என்ற 3 வயது சிறுவனை கவ்விக்கொண்டு ஒரு புதருக்குள் ஓடியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர் கூச்சலிட்டு கத்தியபடியே சிறுத்தையின் பின்னால் ஓடினர். அங்கு காவல் பணியில் இருந்த தேவஸ்தான கண்காணிப்பு படையினரும் டார்ச் லைட் அடித்தபடி சிறுத்தையை பின் தொடர்ந்து ஓடினர். இதனால் சிறுவனை கீழே போட்டு விட்டு சிறுத்தை ஓடிவிட்டது. காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவன், திருப்பதியில் உள்ள ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார்.
சிறுவனை தாக்கிய சிறுத்தையை பிடிக்க சேஷாசலம் வனப்பகுதிகளில் 2 இடங்களில் கூண்டுகள் அமைக்கப்பட்டன. கூண்டில் சிறுத்தையை வன அதிகாரிகள், திருப்பதி எஸ்.வி. வன விலங்கு பூங்காவிற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். தாய் சிறுத்தையை காணாததால் குட்டி சிறுத்தை மனிதர்கள் நடமாடும் பகுதிக்கு வந்து, சிறுவனை தாக்கியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். சிறுத்தை கூண்டில் சிக்கியதால் ஏழுமலையான் பக்தர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அவர்கள் பயமின்றி மலையேறிச் சென்றனர்.
இந்த நிலையில் மற்றுமொரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்று காலையில் குடும்பத்தோடு பாதையாத்திரை சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று தாக்கியதில் அந்த சிறுமி உயிரிழந்துள்ளார். ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் போத்தி ரெட்டி பாளையத்தை சேர்ந்த தினேஷ் குமார் என்பவர், மனைவி சசிகலா , மகள் லக்ஷிதா, 6 மற்றும் மகன் தினேஷ்குமார் ஆகியோருடன் நேற்று இரவு 7. 30 மணி அளவில் அலிபிரி நடைபாதையில் நடந்து சென்றுள்ளார்.
நரசிம்ம சாமி கோவில் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது, சிறுமி லக்ஷிதா திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனையறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், பக்தர்கள் கூட்டத்தில் மகளை தேடி அலைந்தனர். நீண்ட நேரமாகியும் மகள் கிடைக்காததால் பதற்றம் அடைந்த பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து காவல்துறை மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் போலீசார் இரவு முழுவதும் சிறுமி லக்ஷிதாவை வனப்பகுதி முழுவதும் தேடி வந்தனர்.
மலைப்பாதையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், சிறுமி பெற்றோருக்கு முன்பாக தனியாக நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. பின்னர் கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் சிறுமி லக்ஷிதா நரசிம்ம சாமி கோவில் அருகே ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளார்.. சிறுமியின் உடல் அருகே சிறுத்தையின் சாணம் கிடந்ததை அடுத்து, சிறுத்தை தான் சிறுமையை இழுத்துச் சென்று அடித்து கொன்றிருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர். சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் திருப்பதிக்கு பாதையாத்திரையாக செல்லும் பக்தர்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications