ஓடும் பஸ்சில் பலாத்காரம்.. கேபினில் பெண்ணை சீரழித்த 2 டிரைவர்கள்.. கடைசியில் பயணிகள் வைத்த ட்விஸ்ட்
லக்னோ: உதவி செய்வது போல் நடித்து ஓடும் பஸ்சில் இளம்பெண் ஒருவரை 2 டிரைவர்கள் பஸ் கேபினில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. இஇந்த பஸ்சில் லலித், முகமது ஆரிப் ஆகியோர் டிரைவர்களாக இருந்தனர்.

பஸ்சில் இருக்கைகள் அனைத்தும் பயணிகளால் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டது. இதனால் பஸ்சில் கூட்டம் அலைமோதியது. அந்த பஸ்சில் பயணிக்க விரும்பிய சில பயணிகளுக்கு இருக்கைகள் என்பது கிடைக்கவில்லை.
இதையடுத்து பஸ்சில் டிரைவர் அருகே உள்ள கேபினில் சில பயணிகளை 2 டிரைவர்களும் அமர வைத்தனர். அப்போது இளம்பெண் ஒருவரும் கான்பூரில் இருந்து ஜெய்ப்பூரில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு செல்வதற்காக பஸ் கேபினில் ஏறி அமர்ந்தார். இதையடுத்து கேபின் பகுதியில் இருந்த ஒவ்வொரு பயணிகளும் தங்களின் இடங்கள் வந்தவுடன் இறங்கி சென்றனர்.
ஒரு கட்டத்தில் கேபினில் 2 டிரைவர்களும் அந்த இளம்பெண் மட்டுமே இருந்தனர். பஸ் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது இரவு 7.30 மணியளவில் 2 டிரைவர்களும் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க தொடங்கினர். இருவரும் மாறி மாறி பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்தனர். பஸ்சின் கேபினில் இருந்து உள்ளே இருக்கைக்கு செல்லும் இடத்துக்கான கதவு பூட்டப்பட்டு இருந்தது.
இதனால் கேபினில் நடக்கும் சம்பவம் பஸ்சின் உள்ளே இருக்கும் பயணிகளுக்கு தெரியவில்லை. இதற்கிடையே பஸ்சின் கேபின் பகுதியில் இருந்து பெண் அலறும் சத்தம் கேட்டது. இதையடுத்து பஸ்சில் பயணித்த பயணிகள் கேபின் கதவை வலுக்கட்டாயமாக திறந்து பார்த்தனர். அப்போது தான் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை அவர்களுக்கு தெரியவந்தது.
இதையடுத்து சகபயணிகள் 2 டிரைவரையும் பிடித்து சரமாரியாக தாக்கி பெண்ணை மீட்டனர். இதற்கிடையே டிரைவர் லலித் அங்கிருந்து தப்பித்துவிட்டார். மாறாக டிரைவர் முகமது ஆரீப்பை பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் 2 டிரைவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு டிரைவர் லலித்தை தீவிரமாக தேடிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications