விபத்தில் இறந்த காதலன்- பிரிவு தாங்காமல் 11வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த காதலி!
பெங்களூரு: பெங்களூருவில் காதலன் விபத்தில் பலியான காரணத்தினால் 11 ஆவது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் ஒருஅவ்ர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு பேட்ராயனபுரா அருகே வசித்து வந்தவர் பூஜா. இவர் கப்பன் பார்க் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கஸ்தூரிபா ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று மதியம் 2 மணியளவில் தான் வேலை செய்யும் நிறுவனத்தின் 11 ஆவது மாடிக்கு சென்ற பூஜா திடீரென்று கீழே குதித்தார்.

இதில், அவரது தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக செத்தார். இதுபற்றி அறிந்ததும் கப்பன் பார்க் போலீசார் மற்றும் மத்திய மண்டல துணை கமிஷனர் சந்தீப் பட்டீல் விரைந்து சென்று பூஜாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். மேலும் அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதமும் போலீசார் கையில் சிக்கியது.
அதில், "தற்கொலை முடிவை நான் எடுத்திருக்கக்கூடாது. ஆனாலும் அப்படி செய்ய வேண்டியதாகி விட்டது" என்று மட்டும் பூஜா எழுதி இருந்தார். பின்னர் பூஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக பவுரிங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில், பூஜா வேலை செய்த அதே நிறுவனத்தில் ஜே.சி.நகரை சேர்ந்த சரண் என்பவர் வேலை செய்துள்ளார். அப்போது 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டு சரணும், பூஜாவும் காதலித்துள்ளனர். இந்த நிலையில், பெங்களூரு புறநகர் நந்திமலைக்கு தனது நண்பர்களுடன் சென்ற சரண் விபத்தில் சிக்கி பலியாகி விட்டார்.
நேற்று காலையில் சரணின் இறுதி சடங்கு நடந்துள்ளது. இதில், கலந்து கொண்டு விட்டு நிறுவனத்திற்கு வேலை செய்ய வந்த பூஜா மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. காதலன் விபத்தில் பலியானதால் மனம் உடைந்த பூஜா தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதுகுறித்து கப்பன் பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications