காதலன் சொன்னதால் பாலத்தில் இருந்து கீழே குதித்த காதலி காயம்
டெல்லி: காதலன் மீதுள்ள காதலை நிரூபிக்க பாலத்தில் இருந்து குதித்து காலை உடைத்துக் கொண்டுள்ளார் டெல்லியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர். பெண்ணை தற்கொலைக்குத் தூண்டியதாக காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியை சேர்ந்தவர் அனிதா. இவருக்கும் காசிபூர் பகுதியில் செல்போன் கடையில் பணிபுரியும் வாசிம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர்.
இந்நிலையில் தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் அனிதா டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு இடம் பெயர்ந்தார். இதனால் அனிதாவை மறந்துவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்தார் வாசிம். அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதை அறிந்த அனிதாவின் தோழி அவருக்கு இதுபற்றி தகவல் கொடுத்தார்.
அதோடு திருமண நிச்சயதார்த்த படத்தை செல்போனிலும் அனுப்பி வைத்தார். அதை பார்த்தும் ஆத்திரம் அடைந்த அனிதா டெல்லிக்கு அவசரமாக வந்தார்.
நேற்று மாலை காதலன் வாசிமை சந்தித்தார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வாசிம் தன் மீது காதல் இருப்பது உண்மையானால் பாலத்தில் இருந்து குதிக்க முடியுமா? என்று கேட்டார்.
தனது காதல் உண்மையானது என்பதை நிரூபணம் செய்ய அனிதா பாலத்தில் இருந்து குதித்தார். இதில் அவரது கால் எலும்பு முறிந்தது. அவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வாசிமை கைது செய்தனர். காதலை நிரூபிக்க இளம்பெண் பாலத்தில் இருந்து குதித்தது கிழக்கு டெல்லி மதுவிகார் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications