வீட்டிலிருந்த நகை, பணத்தை திருடி நண்பருக்கு பரிசளித்த இளம்பெண்- பெங்களூரில் பரபர!
பெங்களூரு: பெங்களூருவில் வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தினை திருடி நண்பருக்கு பரிசளித்த இளம்பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு எலகங்கா நியூ டவுன் பகுதியில் வசித்து வருபவர் சங்கர். இவருடைய மகள் நந்தினி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கரின் மனைவி வீட்டில் இருந்த தங்க நகை மற்றும் பணம் என மொத்தம் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மாயமாகி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் தனது கணவரிடம் கூறினார். இதையடுத்து இருவரும் வீட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் தங்க நகை மற்றும் பணத்தை தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் நகையும், பணமும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் சம்பவம் குறித்து தங்களின் மகள் நந்தினியிடம் கூறினார்கள். மேலும் நகை, பணம் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்ய இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அப்போது நந்தினி கூறியதை கேட்டு அவர்கள் அதிர்ந்து போனார்கள். அதாவது, "எனக்கும் எலகங்காவில் தனியார் கல்லூரியில் படித்து வந்த கொடிகேஹள்ளி டாடா நகரை சேர்ந்த ஷாருக் முக்காந்தர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்கள் ஆனோம். இதற்கிடையே ஷாருக் தனது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். பின்னர், அவர் தனியாக டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார். வீட்டில் இருந்த தங்க நகை, பணத்தை நான் தான் எடுத்து அவருக்கு பரிசளித்தேன்" எனக் கூறினார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நந்தினியின் பெற்றோர் அவரை திட்டியதோடு, ஷாருக்கிற்கு நந்தினி பரிசளித்த நகை, பணத்தை திரும்ப வாங்கித்தர வேண்டும் என எலகங்கா நியூ டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இதற்கிடையே, ஷாருக் கொடிகேஹள்ளி போலீசில் ஒரு புகார் செய்துள்ளார். அதில், "பணம்-நகைகள் கேட்டு நந்தினியின் பெற்றோர் என்னை கடத்தி, 2 நாட்கள் சிறை வைத்து உடல் ரீதியாக தொல்லை தந்தனர். நகை-பணத்தை திரும்ப கொடுப்பதாக நான் கூறியதை தொடர்ந்து அவர்கள் என்னை விடுவித்தனர்" என கூறப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் கொடிகேஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து எலகங்கா நியூ டவுன் மற்றும் கொடிகேஹள்ளி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications