ஜோஷிமத் பேரழிவு! தேசிய பேரிடராக அறிவிக்க கோரிய மனு.. உயர் நீதிமன்றத்தை நாட உச்ச நீதிமன்றம் உத்தரவு
டேராடூன்: உத்ராகண்ட் மாநிலத்தின் இமயமலை அடிவாரத்தில் அமைந்திருக்கக்கூடிய ஜோஷிமத் நகரம் கொஞ்சம் கொஞ்சமாக பூமிக்குள் புதைந்து வரும் நிலையில் இந்த சம்பவத்தை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த 11ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இமயமலைக்கும், பத்ரிநாத் போன்ற புனித தலங்களுக்கும் நுழைவு வாயிலாக இருக்கும் ஜோஷிமத் நகரம் கடல்மட்டத்திலிருந்து சுமார் மூவாயிரம் அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. இந்நிலையில், சமீப நாட்களாக இந்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் நிலவெடிப்பு காரணமாக நகரத்தில் உள்ள 600க்கும் அதிகமான வீடுகள் மண்ணில் புதைய தொடங்கியுள்ளன. இதன் காரணமாக இப்பகுதியிலிருந்து மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தற்போது வரை 5 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. இந்த நகரின் பிரதான வருவாய் சுற்றுலா மூலமாகதான் கிடைக்கிறது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மற்றும நிலவெடிப்பு காரணமாக சுற்றுலா பயணிகள் தங்கள் முன்பதிவை ரத்து செய்துள்ளனர். வீடுகளை இழந்தவர்கள் பாதுகாப்பு முகாம்களில் சிரமப்படுகையில், வீடுகளில் இருப்போர் வருவாய் இன்றி தவித்து வருகின்றனர்.

சுரங்கம்
இந்நகரத்தின் தற்போதைய நிலைக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் மிக முக்கிய காரணமாக சொல்லப்படுவது தேசிய அனல் மின் கழகத்தின் (NTPC) கட்டுமான பணிகள்தான். NTPC ஜோஷிமத் நகரத்தையொட்டியுள்ள பகுதியில் சுரங்க பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக அருகில் இருக்கும் வீடுகளில் லேசான அதிர்வுகள் அவ்வப்போது ஏற்பட்டுள்ளன. இதனை உணர்ந்த மக்கள் அப்போது மாவட்ட ஆட்சியர் தொடங்கி முதலமைச்சர் வரை விரிவாக கடிதம் எழுதியுள்ளனர். ஆனால் அவர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை. இதனையடுத்து மீண்டும் சில நாட்களில் கட்டிடங்கள் அதிர தொடங்கியுள்ளன.

பிரச்னை
இந்த முறை மக்கள் பீதியடைந்து மீண்டும் ஆட்சியர் தொடங்கி முதலமைச்சர் வரை கடிதம் எழுதியுள்ளனர். அதேபோல மூன்றாவது முறையும் கடிதம் எழுதியுள்ளனர். அப்போதும் யாரும் வந்து பார்க்கவில்லை. இப்படியே மக்கள் கடிதம் எழுதிக்கொண்டிருக்கையில் திடீரென சில நாட்களுக்கு முன்னர் வீடுகள் மண்ணில் புதைய தொடங்கிவிட்டன. அதன் பின்னர்தான் விஷயம் பெரியதாக வெடித்திருக்கிறது. ஒரு கட்டத்தில் கோயில் ஒன்று முழுமையாக மண்ணில் புதைந்திருக்கிறது. இந்த சம்பவங்களையடுத்து அரசு அதிகாரிகள் ஆய்வில் இறங்கியுள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஹிமான்ஷு குரானா கூறுகையில்,

கடிதம்
"ஆம் எனக்கும் முதலமைச்சருக்கும் இது குறித்த கடிதம் ஏற்கெனவே வந்திருந்தது. எனவே நாங்கள் ஒரு குழுவுடன் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க கடந்த டிசம்பரில் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தோம். பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளில் விரிசல் இருந்தது. ஆனால் இந்த விரிசலுக்கு என்ன காரணம் என்பது முறையாக தெரியாது. அவர்கள் NTPC-ன் கட்டுமான பணிகள் மீது குற்றம்சாட்டினர். இருப்பினும் முறையான ஆய்வு இல்லாமல் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நாங்கள் ஆய்வுக்கு தயாரானோம். அதற்குள் இச்சம்பவம் நடந்துவிட்டது. மட்டுமல்லாது NTPC மேற்கொள்ளும் பணிகள் அனைத்தும் உரிய வழிக்காட்டு நெறிமுறைகளின்படிதான் மேற்கொள்ளப்பட்டன" என்று கூறியுள்ளார்.

ஆய்வு
இந்நிலையில் தற்போது வரை இந்நகரம் சுமார் 5.4 செ.மீ அளவு நிலத்தில் புதைந்துள்ளதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்காலிக நிவாரண தொகையாக ரூ.1.5 லட்சம் வழஙகப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார். நிலைமை இவ்வாறு இருக்க கடந்த 11ம் தேதி உச்சநீதிமன்றத்தில், இந்த நிலச்சரிவு மற்றும் நில வெடிப்பு சம்பவத்தை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதேபோல இந்த மனு அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

விசாரணை
இதற்கு பதிலளித்த நீதிபதிகள் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் தங்கள் பணிகளை செய்து வருகின்றன. எல்லாவற்றிலும் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்கிற அவசியமில்லை என்றும் கூறியிருந்தனர். இதனையடுத்து மனு மீதான விசாரணை 16ம் தேதியான இன்று ஒத்திவைக்கப்பட்டது. . இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் ஜோஷிமத் நகரில் நுண் நில அதிர்வு கண்காணிப்பு கருவி அமைக்கப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications