கேரளத்தை போன்று கோவாவும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படுமாம்... ஒரு அதிர்ச்சி எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

பனாஜி: கேரளத்தை போன்று கோவாவும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் என்று சுற்றுச்சூழலியலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கேரளத்தில் கடந்த 3 வாரங்களாக பெய்த பேய் மழையால் அந்த மாநிலத்தின் இயல்பு நிலையே புரட்டி போடப்பட்டுவிட்டது. மொத்தமுள்ள 14 மாவட்டங்களும் தண்ணீரில் தத்தளித்து வருகின்றன.

மழை சற்று ஓய்ந்த போதும் வெள்ளநீர் இன்னும் வடியவில்லை. இதனால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இது 100 ஆண்டுகளில் இல்லாத வெள்ளம் என்று கூறப்படுகிறது.

கோவாவும்

கோவாவும்

கடவுளின் தாய் வீடான கேரளம் இத்தகைய நிலையில் இருப்பதை காணும் அண்டை மாநில மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் நமக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அதாவது இதே போன்று இயற்கை சீற்றத்தை கோவாவும் சந்திக்குமாம்.

ஆய்வு

ஆய்வு

இதை நாங்கள் சொல்லவில்லை. சுற்றுச்சூழலியலாளர் மாதவ் காட்ஜில் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அவரால் ஏற்படுத்தப்பட்ட ஆணையம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டிருந்தது. அந்த ஆய்வு அறிக்கை குறித்து காட்ஜில் கூறுகையில் மற்ற மாநிலங்களை போன்று கோவாவிலும் சுயலாபத்துக்காக மக்களை பற்றி சிலர் கவலைப்படாமல் உள்ளனர்.

சீரழிவு

சீரழிவு

இதுபோன்ற பிரச்சினைகள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சுற்றுச்சூழலினால் ஏற்படுகிறது. கேரளாவை போல் கோவா மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உயரத்தில் இல்லை என்கிற போதிலும் கோவாவும் இது போன்ற இயற்கை சீற்றத்தை சந்திக்கும் என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும். பேராசை மற்றும் அதிக லாபத்துக்காக சுற்றுச்சூழல் சீரழிவை தடுக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கோவாவும் பாதிக்கும்

கோவாவும் பாதிக்கும்

மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட எம்.பி.ஷா ஆணையம் இரும்பு தாதுக்களை சட்டவிராதமாக சுரண்டுவதால் சிலர் 35,000 கோடி ரூபாய் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். இந்த பேராசை சுற்றுச்சூழலையே அழிக்கும் அளவுக்கு செல்கிறது. எனவே சட்டவிரோத சுரங்க பணிகள், மணல் குவாரிகளை உடனடியாக நிறுத்தாவிட்டாலும் ,அரசு அதை தடுக்காவிட்டாலும் கேரளத்துக்கு ஏற்பட்ட முடிவு கோவாவுக்கும் ஏற்படும் என்பதில் சந்தேகமே இல்லை என்கிறார் 73 வயது சுற்றுச்சூழலியாளர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+