பல்லெல்லாம் கொட்டி பாட்டியான ஆடு - 15வது பிரசவத்தில் 5 குட்டி போட்டு சாதனை!
பெங்களூரு: கர்நாடகாவில் வயதான ஆடு ஒன்று 15 வது பிரசவத்தில் 5 குட்டி ஆடுகளை ஈன்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தங்கவயல் ஊரக புறநகரில் உள்ள ராஜேஷ்கேம்ப் பகுதியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் விஜய மாணிக்கம்.
இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகள் வளர்த்து விவசாயம் செய்து வரு்கிறார். அவரது வீட்டில் வளர்க்கும் ஆட்டுக்கு 20 வயதாகிறது. ஒவ்வொரு பிரசவத்திலும் இந்த ஆடு ஐந்து குட்டிகளை போடுகிறது.

15வது முறையாக:
இந்த ஆடு நேற்று முன்தினம் இரவு 15 ஆவது முறையாக பிரசவித்து ஐந்து குட்டிகளை ஈன்றுள்ளது. அதில் ஒரு குட்டி இறந்து போனாலும் மற்ற நான்கு குட்டிகளும் ஆரோக்கியமாக உள்ளன.
பல் விழுந்த பாட்டி:
வயதான காரணத்தால் இந்த ஆட்டிற்கு பல் அனைத்தும் விழுந்துள்ளது. தீவனம்கூட சரியாக எடுத்து கொள்ளாத நிலையில் பொக்கை வாயாலேயே இலை, தழை, தவிடு போன்ற மிருதுவான தீனியை மென்று தின்று சமாளிக்கிறது.
இன்னும் 2 தடவையா?!:
இது இன்னும் இரண்டு முறை கர்ப்பம் தறித்து குட்டி போடும் என்ற நம்பிக்கை உள்ளதாக அதன் உரிமையாளர் விஜயமாணிக்கம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
லாபம் தரும் ஆடு:
மேலும், அதிகளவில் குட்டிகளை ஈனும் இந்த ஆட்டின் காரணமாக ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையை லாபமாக பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
-
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications