சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபு என்னை டார்ச்சர் செய்தார்: மருமகள் போலீசில் பரபரப்பு வாக்கு மூலம்
இந்தூர்: சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபு, அவரது மகன் நாராயண் சாயும் தன்னை கொடுமைபடுத்தியதாக ஜானகி நாரயண் போலீசில் வாக்கு மூலம் அளித்துள்ளார். இதன் மூலம் இருவருக்கும் நெருக்கடி அதிகரித்துள்ளது.
பாலியல் வழக்குகளில் சிக்கிய சாமியார் ஆசாராம் பாபு கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ஜோத்பூர் சிறையிலும், அவரது மகன் நாராயண் சாய் சூரத் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் மீது குடும்ப வன்முறை வழக்கு தொடர்ந்த நாராயண் சாயின் மனைவி ஜானகியும் (வயது 38) நேற்று போலீசில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அதில் கடந்த 1997 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி நாராயண் சாயை நான் திருமணம் செய்தேன். திருமணத்திற்குப் பிறகு நாராயண் சாய்க்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டதால் நான் மனரீதியான சித்ரவதையை அனுபவித்தேன். இந்த கள்ளத்தொடர்பை கண்டித்தபோது என்னை வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருக்கும்படி மிரட்டினார். தனது பெண் சீடருடன் தொடர்பு வைத்து அவரை கர்ப்பமாக்கினார்.
என்னை விவாகரத்து செய்தபின்னர் மறுமணம் செய்யப்போவதாக மிரட்டி வந்த அவர், பெண் சீடரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. போபாலில் உள்ள மதிப்புமிக்க சொத்தை தானமாக வழங்கும்படி மறைந்த என் தந்தையிடம் ஆசாராம் நெருக்கடி கொடுத்தார்" என்று கூறியுள்ளார். மேலும் இருவருக்கும் திருமணம் ஆன போட்டோவையும் போலீசில் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாயுக்கும் நெருக்கடி அதிகரிக்கக் கூடும் என தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications