நாடாளுமன்றத்தில் 'கோட்சே' என்ற வார்த்தையை பயன்படுத்த தடை இல்லை: சபாநாயகர் உத்தரவு
டெல்லி: மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேயின் பெயர் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தை இல்லை என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டுள்ளார்.
கோட்சே பெயரை 'பயன்படுத்தக்கூடாத வார்த்தை' என்று கூறி நாடாளுமன்றத்தில் தடை செய்யப்பட்டிருந்தது. இதனை நீக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்த சிவசேனா எம்.பி., ஹேமந்த் துக்காராம் கோட்சே குரல் கொடுத்து வந்தார்.

எம்.பி.யாக உள்ள தனது பெயரின் கடைசிப் பகுதியில் இடம் பெற்றிருக்கும் கோட்சே என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதிப்பது என்ன நியாயம் என அவர் நாடாளுமன்ற சபாநாயகருக்கும், ராஜ்யசபா தலைவருக்கும் கடிதம் எழுதி இருந்தார்.
இந்த தடையை நீக்கி சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில் நாடாளுமன்றத்தில் ‘நாதுராம் கோட்சே' என்பது பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் பட்டியலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications