தங்கம் பாயும் நதி.. இந்தியாவில் எங்கு இருக்கு தெரியுமா? பாருங்க!
ராஞ்சி: இந்தியாவில் தங்கம் பாயும் நதி ஒன்று இருக்கிறது. இந்த ஆற்றில் தங்க துகள் கலந்து வருவதாகவும், அதை உள்ளூர் மக்கள் பிரித்து எடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நதிக்கு சுபர்ணரேகா என்று பெயர். அதாவது சுபர்ணம் என்றால் தங்கம், ரேகா என்றால் கோடு, தங்கம் பாயும் கோடு/நதி என்பதுதான் இதன் பொருளாகும்.

ஜார்க்கண்ட்டில் தொடங்கி, உத்தரகாண்ட், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா என 4 மாநிலங்களில் 747 கி.மீ தொலைவுக்கு இந்த நதி பாய்கிறது. இந்த நதியின் நீருடன் தங்க துகள்கள் பாய்ந்து ஓடுவதாகவும், அதை வடிக்கட்டுவதன் மூலம் தங்கத்தை தேடி கண்டுபிடிக்கலாம் என்றும் உள்ளூர் மக்கள் சொல்கிறார்கள். பூமியின் அடியில்தான் தங்கம் இருக்கும். அந்த வகையில், பூமியின் அடியிலிருந்து ஊற்றாக பெருக்கெடுத்து, காடு மலை எல்லாம் சுற்றி தங்கத்தை இந்த நதி கொண்டு வந்து சேர்க்கிறது.
இதற்கு பின்னால் புராண கதை ஒன்று இருக்கிறது. மகாபாரதக் காலத்தில், பாண்டவர்கள் காட்டில் வசித்தபோது, குந்தி தேவிக்கு தாகம் எடுத்தது. அந்த நேரத்தில் அருகில் எந்த நீரூறும் இல்லாததால், அர்ஜுனன் தனது வில்லால் ஒரு அம்பை செலுத்தினார். அது பாய்ந்த இடத்திலிருந்து நீர் ஊற்றாக பெருக்கெடுக்க தொடங்கியிருக்கிறது. இப்படி வந்த நீரில் தங்கமும் கலந்து வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. எனவேதான் இந்த நிதிக்கு சுப்ணரேகா நதி என்று பெயர் வந்திருப்பதாகவும் மக்கள் கூறுகிறார்கள்.
அறிவியல் ரீதியான காரணத்தை விளக்கும் ஆய்வாளர்கள், நதி மலையின் மேடு பள்ளங்களை கடந்துதான் ஆற்றுக்கு வந்து சேர்கிறது. இப்படி வரும்போது தங்கமும் சேர்ந்து வந்திருக்கும் என்று கூறுகின்றனர்.
எப்படி இருப்பினும் இந்த நதி உள்ளூர் மக்களால் மிகுந்த மரியாதைக்கு உரியதாக பார்க்கப்படுகிறது. நதிக்கு தெய்வீக சக்தி இருப்பதாகவும் கருதப்படுகிறது. இந்த நதி ஜார்கண்ட் மாநிலம் உள்ள ராஞ்சியின் அருகே உள்ள நாக்ரி பீடபூமி பகுதியில் உருவாகிறது. இந்த நதியின் நீர் விவசாயம், குடிநீர், மற்றும் மின்னாற்றல் உற்பத்தி போன்ற பல துறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த நதிக்கரையில் வாழும் மக்களின் பிரதான தொழிலாகவே தங்கம் சேமிப்பு இருக்கிறது. சேர் sieve என்கிற வடிக்கட்டியை பயன்படுத்தி கிராம மக்க தங்கத்தை சலித்து எடுக்கிறார்கள்.
ஒருநாளைக்கு 60-80 தங்க உருண்டைகள் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. இதெல்லாம் ஒரு பருக்கை அரிசி அளவுக்கும் அல்லது அதைவிட சிறியதான அளவில்தான் இருந்திருக்கின்றன. மக்கள் தங்கம் எடுக்கிறேன் என்கிற பெயரில் நதியின் நீரை அதிகம் மாசுப்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.
-
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications