தெலுங்கானா வரைவு மசோதா குறித்து மத்திய அமைச்சரவை இன்று ஆலோசனை

ஆந்திரத்தைப் பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து தெலுங்கானாவின் எல்லை, சொத்துப் பகிர்வு, தண்ணீர்ப் பங்கீடு போன்றவை குறித்துப் பரிந்துரைக்கும் வரைவு மசோதாவை தயாரிப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழுவை அரசு நியமித்தது.
இந்தக் குழுவில் அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோனி, எம்.வீரப்ப மொய்லி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இக் குழு கடந்த ஒரு மாத காலமாக பல முறை கூடி தெலங்கானா மாநிலம் குறித்த வரைவு மசோதாவை தயாரித்தது. மேலும் ஆந்திரத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தியது.
ராயல தெலுங்கானா
இந்நிலையில் சீமாந்திராப் பகுதியில் உள்ள அனந்தப்பூர், கர்னூல் ஆகிய மாவட்டங்களை தெலுங்கானாவில் சேர்ப்பது குறித்தும், புதிய மாநிலத்துக்கு ராயல தெலுங்கானா எனப் பெயர் சூட்டுவது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டது.
கடும் எதிர்ப்பு
இதற்கு ஆந்திரத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அமைச்சர்கள் குழு நேற்று இரவு தெலுங்கானா வரைவு மசோதாவை இறுதி செய்தது.
ஷிண்டே உறுதி
இது குறித்து சுஷில் குமார் ஷிண்டே செய்தியாளர்களிடம் கூறுகையில், தெலுங்கானா பற்றிய வரைவு மசோதாவை இறுதி செய்துவிட்டோம். இந்த மசோதா குறித்து மத்திய அமைச்சரவை ஆலோசனை நடத்த இருக்கிறது என்றார்.
ராயல தெலுங்கானாதான் இறுதி
அமைச்சர்கள் குழு தயாரித்த வரைவு மசோதாவில், தெலுங்கானாவில் சீமாந்திரா பகுதியில் உள்ள அனந்தப்பூர், கர்னூல் ஆகிய மாவட்டங்களைச் சேர்த்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த இரு மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் அதிக அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இரு மாநிலங்களுக்கும் சம பகிர்வு
வரைவு மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், தெலுங்கானா-ஆந்திரம் ஆகிய மாநிலங்களுக்கு தலா 21 மக்களவைத் தொகுதிகளும், 147 சட்டப்பேரவைத் தொகுதிகளும், 45 மேலவை இடங்களும் சரிசமமாக பகிர்ந்தளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications