உச்சநீதிமன்ற நீதிபதி .. பரிந்துரைப் பட்டியலில் தமது பெயரை நீக்க கோபால் சுப்ரமணியம் கோரிக்கை!
டெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கான பரிந்துரை பட்டியலில் இருந்து தமது பெயரை விலக்கிக் கொள்ளுமாறு மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள் பதவிக்கு ஒடிஷா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா, மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சுப்ரமணியம், ரோஹின்டன் நாரிமன் ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான மூத்த நீதிபதிகள் அடங்கிய நியமனக் குழு இதற்கான பரிந்துரையை மத்திய அரசுக்கு கடந்த மாதம் அனுப்பி வைத்தது.

நீண்ட இடைவெளிக்குப் பின், வழக்கறிஞர்களாக உள்ள இருவரது பெயர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நேரடியாக நியமிக்கப்படுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அவர்களது பின்னணி குறித்து புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி, குறிப்புகளுடன் புதிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.
இந்நிலையில் பரிந்துரைக்கப்பட்ட நான்கு பேரில் கோபால் சுப்ரமணியம் பெயரை மத்திய அரசு நிராகரித்து உச்ச நீதிமன்றத்துக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளது.
இதைத் தொடர்ந்தே உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கான பரிந்துரை பட்டியலில் இருந்து தமது பெயரை திரும்பப் பெறுமாறு கோபால் சுப்ரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோபால் சுப்ரமணியம் பின்னணி
தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கோபால் சுப்ரமணியம், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விசாரித்த வர்மா குழு விசாரணையில் வழக்கறிஞராக பணியாற்றியவர்.
ஒடிசாவில் ஆஸ்திரேலிய கிறிஸ்தவ பாதிரியார் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் கொலை குறித்த வாத்வா விசாரணைக் குழுவிலும் இடம்பெற்றவர். திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் வழக்கில் நீதிமன்ற உதவி வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை தீவிரவாதிகள் தாக்குதல் வழக்கு, நாடாளுமன்ற தாக்குதல் வழக்குகளிலும் ஆஜராகி உள்ளார். சொலிசிட்டர் ஜெனரல், இந்திய பார் கவுன்சில் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.
சொராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கில் நீதிமன்றத்தின் உதவி வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு, குஜராத்தில் நரேந்திர மோடி அரசு மீது புதிய குற்றச்சாட்டுகளை வெளியிட்டார். அதன் விளைவாக, அந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications