For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக ஐஏஎஸ் அதிகாரி.. இலங்கைக்கான இந்திய தூதர்.. பன்முக திறமையாளர் கோபால கிருஷ்ண காந்தி

எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட கோபால கிருஷ்ண காந்தி தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிவர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: துணை ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சிகளின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட கோபால கிருஷ்ண காந்தி தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிவர்.

துணை ஜனாதிபதியாக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் ஆகஸ்டில் முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து அப்பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அன்று மாலையே தேர்தல் முடிவுகளும் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Gopala krishna Gandhi was West Bengal governor

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் 18 எதிர்க்கட்சிகள் இன்று டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தின. அதில் காந்தியின் பேரனான கோபால கிருஷ்ண காந்தி நிறுத்துவதாக அறிவித்துள்ளன.

கடந்த 1946-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி பிறந்தவர்.

1968-ஆம் ஆண்டு இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக 1985-ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார்.
அதன் பின்னர் துணை ஜனாதிபதியின் செயலாளராக கடந்த 1985-ஆம் ஆண்டு முதல் 1987-ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.

பின்னர் இந்திய ஜனாதிபதிக்கு கடந்த 1987 முதல் 1992 வரை இணை செயலாளராக பணியாற்றினார். இந்திய தூதரகத்தின் கலாச்சார துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கைக்கான இந்திய தூதராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2004-ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரை மேற்கு வங்கத்தின் 22-ஆவது ஆளுநராக பணியாற்றினார்.

துணை ஜனாதிபதி தேர்தல் அட்டவணை:

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 18

வேட்புமனுக்கள் ஆய்வு தேதி ஜூலை 19

வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி தேதி ஜூலை 21

துணை ஜனாதிபதி தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 5

English summary
Gopala Krishna Gandhi was the governor of West Bengal between 2004 and 2009. It may be recalled that after Narendra Modi became the Prime Minister of India, he had written an open letter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X