மகாராஷ்டிரா பாஜகவின் பிற்படுத்தப்பட்டோர் முகமாக திகழ்ந்த கோபிநாத் முண்டே!
டெல்லி: சாலை விபத்தி சிக்கி உயிரிழந்த மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கோபிநாத் முண்டே, மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் இனத்தைச் சேர்ந்த மூத்த தலைவராக திகழ்ந்தவர்.
டெல்லி விமான நிலையம் அருகே கோபிநாத்முண்டேவின் கார் மீது எதிரே வந்த வாகனம் மோதியதில் விபத்து நிகழ்ந்தது. இதில் காயம்அடைந்த அமைச்சர் கோபிநாத் முண்டே, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோபிநாத் முண்டேக்கு தலையிலும் மார்பிலும் காயம் ஏற்பட்டதால் ரத்தம் பெருமளவில் வெளியேறியதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மரடைப்பில் மரணம்
மேலும் சிகிச்சையின்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதைத் தொடர்ந்து அவர் உயிர் பிரிந்ததாகவும், உடன் இருந்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா தலைவர்
மகாராஷ்டிர மாநிலத்தின் மூத்த பாஜக தலைவர் கோபிநாத் முண்டே, முதன் முறையாக மோடி அமைச்சரவையில் கேபினெட் அமைச்சராக பதவியேற்றார்.

பிற்படுத்தப்பட்டோர் முகம்
1949ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் இதர பிற்படுத்தப்பட்ட வஞ்சரி சமூகத்தில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் கோபிநாத் முண்டே.

5முறை எம்.எல்.ஏ
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு ஐந்து முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் முண்டே. 1980-85; 1990-2009 ஆகிய காலங்களில் எம்.எல்.ஏ.வாக பணியாற்றியவர் முண்டே.

எதிர்க்கட்சித் தலைவர்
மகாராஷ்டிரா சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக 1992-95ஆம் ஆண்டு காலத்தில் பணியாற்றினார்.

துணை முதல்வராக
பின்னர் 1995-1999ஆம் ஆண்டு காலத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராகவும் முண்டே பணியாற்றினார்.

லோக்சபா துணைத் தலைவர்
கடந்த லோக்சபாவில் பாஜக துணைத் தலைவராக இருந்தவர் கோபிநாத் முண்டே.

பிரமோத்மகாஜனின் மைத்துனர்
இவர் மறைந்த பாஜக தலைவர் பிரமோத் மகாஜனின் மைத்துனர். மாநிலத்தில் சரத் பவாருக்கு கடும் போட்டியாக இருந்தவர் கோபிநாத் முண்டே.

நாளை இறுதிச்சடங்கு
அமைச்சராக பதவியேற்ற ஒருவாரத்திற்குள் மரணத்தை கோபிநாத் முண்டே தழுவியுள்ளார். இவரது இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications