இந்தியாவில் இந்த ஆண்டு மட்டும் 844 ஆபாச இணையதளங்களை முடக்கியுள்ளதாம் மத்திய அரசு!
டெல்லி: இந்தியாவில் ஆபாச இணையதளங்கள், சமூக விரோத இணையதளங்கள் உட்பட இதுவரை 844 சமூக இணையப்பக்கங்களை இந்த ஆண்டு மத்திய அரசு முடக்கி உள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தெரிவித்த மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 ஆம் ஆண்டு பிரிவு 69ஏ கீழ் இந்தாண்டில் மட்டும் 492 இணையப்பக்கங்கள் முடக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக 2014 ஆம் ஆண்டு 10 இணையப்பக்கங்களும், 2013 ஆம் ஆண்டு 13 இணையப்பக்கங்களும், 2012 ஆம் ஆண்டு 136 இணையப்பக்கங்களும் மத்திய அரசு முடக்கி இருப்பதாகவும், இதற்கென உருவாக்கப்பட்டுள்ள குழு பரிந்துரைத்ததன் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
அதேபோல், இந்தாண்டு மட்டும் 352 சமூக இணையப்பக்கங்கள் முடக்கப்பட்டிருப்பதாகவும், 2014 ஆம் ஆண்டு மொத்தம் 4192 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், 2423 பேர் கைதாகி இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 ஆம் ஆண்டு பிரிவு 69 ஏ படி, இந்திய நாட்டின் இறையாண்மையையும், ஒற்றுமையையும் குலைக்கும் விதமாகவும், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் விதமாகவும் தகவல்கள் இருந்தால் அந்த இணையப்பக்கங்களை முடக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications