அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம், ஆனா கட்ட மாட்டோம்.. மக்களை குழப்பும் மத்திய அமைச்சர்
லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில்கட்ட அரசு தயாராக இருப்பதாகவும், சுப்ரீம்கோர்ட் உத்தரவு அல்லது பரஸ்பர புரிதல் வர வேண்டும் என்று கலாச்சார மற்றும் சுற்றுலா துறைகளுக்கான மத்திய அமைச்சர் மகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்ற கோரிக்கை இந்து அமைப்புகளிடமிருந்து வலுத்து வருகிறது. இதன் நடுவே, கோவில் கட்ட, குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து அயோத்திக்கு 2 லாரிகளில் கற்கள் வந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா ராமர் கோவில் கட்டப்படும் தினத்தை தெரிவிக்கவேண்டும் என்று கூறிவரும் நிலையில், காங்கிரஸ் கட்சியோ, கோயில் கட்ட வரும் நிதி ஆதாரம் பற்றி விசாரிக்க கேட்டுக்கொண்டுள்ளது.
இதனிடையே மத்திய அமைச்சர் மகேஷ் ஷர்மா கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அரசு உறுதியாக உள்ளது. அயோத்தியில் விரைவில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பது இந்திய மக்களின் கனவாகும்.
எங்களுடைய கட்சியும், அரசும் ஏற்கனவே அவர்களுடைய நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டது. ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம், இருப்பினும் நாங்கள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு அல்லது கோவில் கட்டும் விவகாரத்தில் இரு தரப்பின் பரஸ்பர ஒப்புதலை பெற வேண்டும் என்று காத்திருக்கிறோம்.
இதனால்தான், கோவில் கட்டுவதில் காலம் கடந்து வருகிறது. நாட்டு மக்கள் விரும்பினாலும்கூட, கோர்ட்டில் வழக்கு நிலுவையிலுள்ள நிலையில், ராமர் கோயில் கட்டும் பணியை ஆரம்பிக்க முடியாத நிலையில்தான் மத்திய அரசு உள்ளது என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications