"சுவிஸ் வங்கியில்" அக்கவுண்ட் வைத்திருந்தால் சொல்லனுமாம்.. அரசு ஊழியர்களுக்கு வந்த சோதனை!
டெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் வெளிநாட்டு வங்கிகளில் தாங்கள் வைத்துள்ள வைப்புத்தொகை குறித்த விவரத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று லோக்பால் சட்ட புதிய விதியின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பணியாளர் நலத்துறை லோக்பால் சட்டத்தின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு சில உத்தரவுகளை கடந்த ஜூலை மாதம் பிறப்பித்தது.

அதன்படி மத்திய அரசு ஊழியர்கள், அவர்களது கணவர் அல்லது மனைவி, குழந்தைகள் பெயர்களில் உள்ள சொத்து விவரங்கள், வங்கி கணக்கில் உள்ள இருப்பு விவரம் ஆகியவற்றை கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
தங்கள் சொத்து விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிடுவதால் பாதிப்பு ஏற்படும் என்று சில மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் கவலையை தெரிவித்தனர். ஆனாலும் மத்திய அரசு இந்த விவரங்கள் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்படும் என்று தொடர்ந்து கூறிவருகிறது.
இப்போது இந்த சட்டத்தில் புதிய விதிகளையும் மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் பெயர்களில் வெளிநாட்டு வங்கிகளில் உள்ள வைப்புத்தொகையை தனியாக தெரிவிக்க வேண்டும்.
மத்திய அரசின் சமீபத்திய கணக்குப்படி 3 பிரிவுகளிலும் 26 லட்சத்து 30 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications