பாலியல் சர்ச்சையில் சிக்கிய தென்மாநில ஆளுநர்- சண்டேகார்டியன் பரபர தகவல்

பாலியல் சர்ச்சையில் தென்மாநில ஆளுநர் சிக்கியிருப்பதாக சண்டே கார்டியன் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தென்மாநிலங்களைச் சேர்ந்த ஆளுநர் ஒருவர் பாலியல் சர்ச்சையில் சிக்கியிருப்பதாக சண்டேகார்டியன் லைவ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக சண்டே கார்டியன் லைவ் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள செய்தி:

தென்னிந்தியாவின் முக்கிய மாநிலம் ஒன்றின் ஆளுநர் மீதான பாலியல் புகார்கள் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது. ராஜ்பவனில் பணிபுரியும் பெண் ஊழியர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் ஆளுநர் என்பது புகார்.

Governor of southern state accused of sexual misconduct, reports Sunday Guardian Live

இருப்பினும் இதற்கு முன்னர் ஆளுநராக பணிபுரிந்த மாநிலத்தில் இந்த புகார்கள் கூறப்பட்டனவா? அல்லது புதியதாக பொறுப்பேற்ற மாநில ராஜ்பவனில் இப்புகார்கள் கூறப்பட்டனவா? என்பது குறித்து தெரியவில்லை. தற்போது உளவுத்துறை இப்புகார்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறது.

இந்த விசாரணையில் புகார்கள் உண்மை என உறுதி செய்யப்பட்டால் அந்த ஆளுநரை பதவி விலகுமாறு மத்திய அரசு உத்தரவிடக் கூடும். ஆளுநர் தொடர்பான சிடி, எம்எம்எஸ்கள் எதுவும் இருக்கிறதா? என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு சண்டே கார்டியன் லைவ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+