வருமான வரிக் கணக்கு தாக்கலுக்கு எளிமையான புதிய படிவங்கள்... ஆகஸ்டு 31 வரை அவகாசம்!
டெல்லி: வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய எளிமைப் படுத்தப்பட்ட புதிய படிவங்கள் வெளியிடப் பட்டுள்ளன. அதேபோல், வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக, 14 பக்க படிவம் இந்தாண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அதில், வரி செலுத்துவோர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணம், செயல்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகள் போன்ற கூடுதல் தகவல்கள் கேட்கப்பட்டிருந்தது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து அந்த படிவத்தை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார் மத்திய நிதியமைச்சரான அருண் ஜெட்லி. இந்நிலையில், தற்போது 2015-2016-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கலுக்காக, எளிமைப்படுத்தப்பட்ட புதிய படிவங்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.

கால அவகாசம் நீட்டிப்பு...
அத்துடன், கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசமும், ஆகஸ்டு 31-ந்தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐடிஆர்-2 ஏ...
ஐடிஆர்-2ஏ எனப்படும் இந்த எளிமைப்படுத்தப்பட்ட படிவம், வர்த்தகம், தொழில் மூலம் வருமானம் இல்லாத, வெளிநாட்டில் சொத்து இல்லாத தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டு குடும்பத்தினர் தாக்கல் செய்யக்கூடியது.

வங்கிக்கணக்கு விபரம்...
இதில், வரி செலுத்துவோரிடம் பாஸ்போர்ட் இருந்தால், அதன் எண் மட்டும் குறிப்பிட்டால் போதும், அதோடு, அவரது முந்தைய வங்கி சேமிப்பு மற்றும் நடப்பு வங்கிக் கணக்குகளின் விபரம் குறிப்பிட வேண்டும். இதில் செயல்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்கு விபரத்தை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை..

ஐஎப்எஸ்சி கோட்...
அதேபோல், வங்கிக்கிளையின் ஐ.எப்.எஸ்.சி. கோட் நிரப்ப இடம் விடப்பட்டுள்ளது. ‘ரீபண்ட்' எனப்படும் திரும்பப் பெறும் தொகையை எந்த வங்கிக்கணக்கில் பெற்றுக்கொள்வது என்பதையும் வரி செலுத்துவோர் குறிப்பிட வேண்டும்.

ஆதார் எண்...
இது தவிர ‘ஆதார்' எண் மற்றும் இ-மெயில் முகவரியும் கேட்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் கணக்கு தாக்கல் செய்வதை உறுதி செய்வதற்காக இந்த விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன.

ஐடிஆர்-2...
இதேபோல், வர்த்தகம் மற்றும் தொழில் மூலம் வருமானம் பெறும் தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டு குடும்பத்தினருக்காக ஐடிஆர்-2 என்ற படிவம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், வெளிநாட்டில் சொத்து இருந்தாலோ அல்லது வெளிநாட்டில் இருந்து வருமானம் வந்தாலோ அதுபற்றி குறிப்பிட வேண்டும்.

இந்திய குடிமகன் அல்லாதவர்கள்...
ஆனால், இந்திய குடிமகனாக இல்லாமல், தொழில், வேலை மற்றும் படிப்பு நிமித்தமாக இந்தியாவில் தங்கி இருப்பவர்கள், இந்தியாவில் தங்கி இருக்காத முந்தைய ஆண்டுகளில் வெளிநாட்டில் சொத்து வாங்கி இருந்தால், அதுபற்றி தெரிவிப்பது கட்டாயம் இல்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications