3வது குழந்தைக்கு வாக்குரிமை கொடுக்காதீங்க.. மது, மாட்டிறைச்சியை தடை பண்ணுங்க.. பாபா ராம்தேவ் பரபர!
ஹரித்துவார்: குடும்பத்தில் மூன்றாவதாக பிறக்கும் குழந்தைகளுக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது என யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
நாட்டின் மக்கள் தொகை 133 கோடியை தாண்டியுள்ளது. மக்கள் தொகையில் சீனா முதலிடம் வகிக்க இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.
மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைளை அரசு முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் மக்கள்தொகையை கட்டுப்படுத்தும் வகையில் யோகா குரு பாபா ராம் தேவ் அரசுக்கு யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.

வாக்குரிமை அளிக்கக்கூடாது
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் யோகா குரு பாபா ராம்தேவ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியாதாவது, இந்தியாவில் பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த குடும்பத்தில் மூன்றாவதாக பிறக்கும் குழந்தைகளுக்கு அரசு வாக்குரிமை அளிக்கக்கூடாது.

150 கோடியை தாண்டக்கூடாது
அடுத்த 50 ஆண்டுகளில் இந்திய மக்கள் 150 கோடியை தாண்டக்கூடாது. ஏனெனில் அதற்கு மேலான மக்கள் தொகையை தாங்க நாம் தயாராக இல்லை.

உதவிகள் கூடாது
ஆகையால் குடும்பத்தில் மூன்றாவதாக பிறக்கும் குழந்தைக்கு ஓட்டுரிமை வழங்கக்கூடாது. அந்தக்குழந்தை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது. மேலும் அரசின் உதவிகளையும் அந்த குழந்தை பெறக்கூடாது.

சட்டம் இயற்ற வேண்டும்
இதற்கு ஏற்ற வகையில் அரசு சட்டம் இயற்ற வேண்டும். இப்படி ஒரு சட்டத்தை அரசு இயற்றிவிட்டால் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அதிக குழந்தையை பெற்றுக்கொள்ள மாட்டார்கள்.

சண்டையை தடுக்க ஒரே வழி
இதேபோல் பசுக்களை கொல்வதையும் தடை செய்ய வேண்டும். பசுக்களை கொல்வதை தடை செய்வது ஒன்றுதான் பசு கொல்லையர்களுக்கும் பசு பாதுகாவலர்களுக்கும் இடையிலான சண்டையை தடுக்க ஒரே வழி. மாட்டிறைச்சி சாப்பிட விரும்புபவர்கள், உண்ணும் வகையில் பல இறைச்சிகள் உள்ளன. அவற்றை சாப்பிடலாம்.

இந்தியாவில் ஏன் முடியாது?
நாடு முழுவதும் மதுவை தடை செய்ய வேண்டும். இஸ்லாமிய நாடுகளில் மது முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் இந்தியாவில் மட்டும் ஏன் தடை செய்ய முடியாது?

முனிவர்கள் வாழும் பூமி
இந்தியா முனிவர்கள் வாழும் பூமி. இங்கு மது முற்றிலும் தடை செய்யப்பட வேண்டிய ஒன்று என்று கூறினார். மேலும் பேசிய அவர், பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாலகிருஷ்ணா ஆச்சார்யாவுக்கு ஜெனீவாவில் உள்ள யுஎன்எடிஜி அமைப்பு 10 செல்வாக்கு மிகுந்த சுகாதாரத்துறை நபர் என்ற விருதை வழங்கியிருப்பதாக கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications