கவுரி லங்கேஷ் கொலையை ஒப்புக்கொண்ட இந்துத்துவா தீவிரவாதி.. உண்மை கண்டறியும் சோதனையில் அம்பலம்
கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷை கொலை செய்த குற்றவாளி கே டி நவீன் குமார், தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டு இருக்கிறான்.
பெங்களூர்: கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷை கொலை செய்த குற்றவாளி கே டி நவீன் குமார், தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டு இருக்கிறான்.
கர்நாடகாவில் ''பத்திரிக்கா" என்ற பெயரில் பத்திரிக்கை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார் பிரபல பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ். தனது பத்திரிக்கையில் வலது சாரிகள் குறித்தும், ஆர்.எஸ்.எஸ், பாஜக குறித்தும் அடிக்கடி கட்டுரைகள் எழுதி வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் இந்து யுவ சேனா அமைப்பை சேர்ந்த முக்கியமான நிர்வாகியான கே டி நவீன் குமார் கைது செய்யப்பட்டார்.

ஏற்கனவே ஒப்புக் கொண்டார்
ஏற்கனவே கே டி நவீன் குமார் தன்னுடைய கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டார். கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அவர் விசாரிக்கப்பட்டார். எப்படி இந்த கொலை சம்பவம் நடந்தது என்று ஒவ்வொரு விவரமாக அவர் தெரிவித்தார்.

உண்மை கண்டறியும் சோதனை
ஆனால் அவர் விசாரணை செய்யும் அதிகாரியிடம் மட்டுமே ஒப்புக் கொண்டார், அவர் நீதிபதி முன்னிலையிலும் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். இதற்காக அவர் மீது உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கேட்கப்பட்டது. கே டி நவீன் குமாரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

கொலை
இந்த உண்மை கண்டறியும் சோதனையில் தான் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் இந்த கொலையில் பிரவீன் என்ற தன்னுடைய கூட்டாளிக்கும் தொடர்பு இருக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார். யார் சொல்லி இவர் இந்த கொலையை செய்தார் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை.

ஏற்கனவே பாஜக குற்றச்சாட்டு
பாஜக இந்த விவகாரத்தில் ஏற்கனவே ஆளும் மாநில காங்கிரஸ் கட்சி மீது குற்றச்சாட்டு வைத்து இருந்தது. கே டி நவீன் குமார் இந்துத்துவா பின்னணி உள்ளவர் என்பதால் அவர் மீது தேவையில்லாமல் பலி சுமத்துகிறார்கள் என்று பாஜக கூறியது. ஆனால் இப்போது கே டி நவீன் குமார் உண்மை கண்டறியும் சோதனையில் அனைத்தையும் உளறி இருக்கிறார்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications