மூக்கில் கொட்டும் ரத்தம்.. விடாமல் ஜூரம்.. நாட்டில் முதன்முதலாக 34 வயது நபருக்கு "பச்சை பூஞ்சை" நோய்
நாட்டிலேயே முதல்முறையாக ஒருவரை பச்சை பூஞ்சை நோய் தாக்கி உள்ளது
போபால்: மூக்கில் இருந்து ரத்தம் கசியுமாம்.. உடம்பெல்லாம் நெருப்பாய் ஜுரம் கொதிக்குமாம்.. பிறகு ஒவ்வொரு உறுப்பாய் பாதிப்பை ஏற்படுத்துமாம்.. பச்சை பூஞ்சை நோய் தாக்குதல் இப்படித்தான் இருக்கும்.. இப்போது நம் நாட்டிலேயே முதல்முறையாக பச்சை பூஞ்சை நோய் ஒருவரை தாக்கி உள்ளது.. அவர் இப்போது சீரியஸாக இருக்கிறார்.
இன்னும் கொரோனாவைரஸ் எந்த மாதிரியான நோய் என்றே கண்டுபிடிக்க முடியவில்லை.. அதற்குள் 2வது அலை, 3வது அலை என மிரட்டி கொண்டிருக்கிறது.
இவைகளுக்கு நடுவில் கருப்பு பூஞ்சை நோய் பரவ ஆரம்பித்துவிட்டது.. பாகுபாடு இல்லாமல் எல்லா மாநிலங்களையும் இந்த கருப்பு பூஞ்சை ஆக்கிரமித்து வருகிறது.

வெள்ளை பூஞ்சை
குறிப்பாக மொத்த வடமாநிலமும் இந்த கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.. இதற்கு அடுத்தபடியோ வெள்ளை பூஞ்சை ஒன்று புதிதாக பரவ ஆரம்பித்தது.. பீகாரில் சிலருக்கு இந்த வெள்ளை பூஞ்சை நோய் இருப்பதும் கண்டறியப்பட்டது. இந்த வெள்ளை பூஞ்சை படுபயங்கரமானதாம்.. கருப்பு பூஞ்சையை விட மோசமானதாம்.. கருப்பு பூஞ்சை ஸ்ட்ரைட்டா நுரையீரலை தாக்கும் என்றார்கள்..

நோய் எதிர்ப்பு சக்தி
ஆனால், இந்த வெள்ளை பூஞ்சையானது, நுரையீரலை மட்டுமல்லாமல் தோல், வயிறு, நகங்கள், சிறுநீரகம், மூளை, வாய், என உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதித்துவிடுமாம். உடம்பில் நோய் எதிர்ப்பு குறைவாக இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், புற்றுநோய் நோயாளிகள், ரொம்ப காலத்திற்கு ஸ்டீராய்டுகளை உபயோகிப்பவர்களை இந்த பூஞ்சை நோய்கள், பற்றி கொள்ளும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.

கலக்கம்
அதனால் கருப்பு, வெள்ளை பூஞ்சை நோய் என்றாலே வடமாநில மக்களுக்கு கலக்கம் வந்துவிடுகிறது. இப்படிப்பட்ட சூழலில், மஞ்சள் பூஞ்சை நோய் உத்தரபிரதேசத்தில் உருவாகியது கண்டறியப்பட்டுள்ளது.. இந்த மஞ்சள் பூஞ்சையானது, கருப்பு, வெள்ளை பூஞ்சைகளை விட இன்னும் பயங்கரமானதாம்.. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், பச்சை பூஞ்சை நோய் உருவெடுத்துவிட்டது.. இதில் ஒருவர் நேரடியாக பாதிக்கப்பட்டும் விட்டார். மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் அந்த நபர்.. 34 வயதாகிறது..

கருப்பு பூஞ்சை?
இவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று வந்துள்ளது.. அதனால், ஆஸ்பத்திரியில் சேர்ந்து அட்மிட் ஆகி சிகிச்சை பெற்றுள்ளார்.. பிறகு டிஸ்சார்ஜ் ஆகியும் வந்துவிட்டார்.. ஆனால், மறுபடியும் அவருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. அப்போதுதான் டாக்டர்கள் டெஸ்ட் செய்து பார்த்தனர். ஒருவேளை அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கி இருக்குமோ என்று சந்தேகத்தின்பேரில் டெஸ்ட் செய்தனர்.. ஆனால், பச்சை பூஞ்சை தொற்று அவருக்கு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது..

ரத்தம்
ஏற்கனவே கொரோனா தாக்கியபோது, அவரது நுரையீரல் 90 சதவீதம் பாதிக்கப்பட்டிருந்தது... இப்போது இந்த பச்சை பூஞ்சை தாக்கிவிடவும், நிலைமை இன்னும் மோசமாக உள்ளது..இந்த பச்சை பூஞ்சை தாக்கியதால், மூக்கு வழியே ரத்தம் கசிய ஆரம்பிக்குமாம்.. அதிகமான காய்ச்சல் வருமாம்.. இதெல்லாம்தான் இதன் அபாய அறிகுறிகள்.. இப்போது பச்சை பூஞ்சை நோய் பாதிக்கப்பட்ட நபர், அவசர அவசரமாக சிகிச்சைக்காக விமானம் வழியாக மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்...

முதல் நபர்
அவருக்கு இன்னும் காய்ச்சலும் குறையவில்லை.. அவரது காய்ச்சல் 103 டிகிரிக்கு கீழே குறையவில்லை. நாட்டிலேயே இவர்தான் பச்சை பூஞ்சை நோய் தொற்றுக்கு ஆளான முதல்நபர்.. அதனால், இந்த நோயின் தாக்கம் எப்படி இருக்கும்? என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது இப்போது வரை தெரியவில்லை என்கிறார்கள் இந்தூர் மாவட்ட சுகாதார துறையின் மேலாளர் அபூர்வா திவாரி. இது சம்பந்தமாக டாக்டர்கள் தொடர் டெஸ்ட்களில் இறங்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications