விண்வெளி துறையில் புதிய சாதனை.. சீறி பாய்ந்தது ஜிஎஸ்எல்வி எஃப் 14! இன்சாட் 3 டிஎஸ் மிஷன் வெற்றி
ஸ்ரீஹரிகோட்டா: வானிலை மாற்றங்களை துல்லியமாக கண்காணித்து வழங்குவதற்காக இன்சாட் 3 டிஎஸ் என்ற அதி நவீன செயற்கைக் கோளை ஜிஎஸ்எல்வி எஃப் 14 ராக்கெட் மூலம் இன்று மாலை இஸ்ரோ விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.
விண்வெளித் துறையில் இந்தியா நல்லதொரு வளர்ச்சியை பெற்று வருகிறது. இதை சாத்தியமாக்கி வருவது இஸ்ரோ எனும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஆகும். இந்த நிறுவனம் கடந்த ஆண்டு நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 என்ற செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது.

நிலவில் தரையிறங்கிய நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா வரிசையில் 4 ஆவது நாடு என்ற பெருமையையும், தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது. வானியல், விண்வெளி சார்ந்த பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்ய இஸ்ரோ பல்வேறு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அந்த வரிசையில் இன்சாட் செயற்கைக்கோள் முக்கியமானதாகும்.
பொதுவாக இன்சாட் செயற்கைக்கோள்கள் வானிலை முன்னறிவிப்புகள் தொடர்பான ஆய்வுகளை நடத்த விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு பேரிடர் காலங்களில் முன் கூட்டியே தகவல்களை பூமிக்கு அளிக்கும்.
இதனால் இயற்கை சீற்றங்களில் இருந்து தற்காக்கும் நடவடிக்கைகளை அந்தந்த அரசுகள் எடுக்கும். அந்த வகையில் இன்சாட் 3 டிஎஸ் என்ற செயற்கைக்கோள் இன்றைய தினம் மாலை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது. முன்னதாக இதற்கான 27 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று மதியம் 2.30 மணிக்கு தொடங்கியது. ஏற்கெனவே அனுப்பப்பட்ட இன்சாட் 3 டி மற்றும் இன்சாட் 3 டிஆர் ஆகிய வானிலை முன்னறிவிப்பு செயற்கைக்கோள்களுக்கு இந்த புதிய இன்சாட் 3டிஎஸ் உதவியாக இருக்கும். இந்த நவீன செயற்கைக்கோள் கடல், நிலம் சார்ந்த வானிலை முன்னறிவிப்புகளை துல்லியமாக அறிவிக்கும்.
இந்த செயற்கைகோளை சுமந்து செல்லும் ஜிஎஸ்எல்வி எஃப் 14 ராக்கெட் நாட்டி பாய் (Naughty Boy) என அழைக்கப்படுகிறது. இந்த ராக்கெட் இதுவரை தொடர் தோல்விகளை கொடுத்துள்ளதால் அந்த பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த ராக்கெட்டை பல்வேறு செயற்கைக்கோள்களுடன் 15 முறை விண்ணுக்கு செலுத்தியதில் 6 முறை தோல்வியை சந்தித்துள்ளது. எனினும் இந்த முறை ஜிஎஸ்எல்வி எஃப் 14 ராக்கெட், இன்சாட் 3 டிஎஸ் எனும் செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலை நிறுத்தியுள்ளது.
இந்த செயற்கைக்கோளில் இமேஜர், சவுண்டர், டேட்டா ரிலே டிரான்ஸ்பாண்டர், செயற்கைகோள் உதவியுடன் தேடல் மற்றும் மீட்க உதவும் டிரான்ஸ்பாண்டர் ஆகிய 4 கருவிகள் உள்ளன. இந்த இன்சாட் 3 டிஎஸ் செயற்கைக்கோள் 2,275 கிலோ எடை கொண்டது. இதில் 6 சேனல் இமேஜர் உள்பட 25 கருவிகள் உள்ளன. சந்திரயான் 3, ஆதித்யா, எக்ஸ்போசாட் உள்ளிட்ட மிஷன்களை தொடர்ந்து, இன்சாட் 3 டிஎஸ் மிஷன் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டிருப்பது, இந்திய விண்வெளி துறை மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications