ஜி.எஸ்.டி. மசோதாவில் எதிர்க்கட்சிகளின் திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) மசோதாவில் 1% கூடுதல் வரியை ரத்து செய்வது, மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அனைத்து மறைமுக வரிகளுக்கும் மாற்றாக, சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான அரசியல் சட்ட திருத்த மசோதா, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் லோக்சபாவில் நிறைவேறியது.

ஆனால், ராஜ்யசபாவில் இன்னும் நிறைவேறவில்லை. இதனால், இந்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி அமல்படுத்த திட்டமிட்டிருந்த ஜி.எஸ்.டி. வரியை இன்னும் அமல்படுத்த முடியவில்லை.
இதனால் மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை கூட்டத்தில் கருத்து ஒற்றுமை ஏற்பட்டது. இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ஏற்கனவே லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட ஜி.எஸ்.டி. மசோதாவில் திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- மாநிலங்களுக்கிடையே பொருட்களை கொண்டு செல்லும்போது அப்பொருட்களின் மீது சம்பந்தப்பட்ட மாநிலம், ஜி.எஸ்.டி. வரிக்கு மேல் கூடுதலாக 1% வரியை விதிக்க வகை செய்யப்பட்டு இருந்தது. இந்த கூடுதல் வரியை ரத்து செய்வது
- ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏதேனும் வருவாய் இழப்பு ஏற்பட்டால் அதை ஈடுகட்ட 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு அளிப்பது
- ஜி.எஸ்.டி. வரி அமல் தொடர்பாக மத்திய-மாநில அரசுகளுக்கிடையே சர்ச்சை ஏற்பட்டால் அதை மத்திய-மாநில அரசுகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் மூலம் தீர்வு காண்பது
என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த திருத்தங்களுடன் புதிய ஜி.எஸ்.டி. மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் ஒரு கோரிக்கையான 1% வரி ரத்து ஏற்கப்பட்டுள்ளதாலும், மாநிலங்களுடன் கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளதாலும் மசோதா நிறைவேறி விடும் என்று மத்திய அரசு கருதுகிறது.
ராஜ்யசபாவில் நிறைவேறிய பிறகு இந்த திருத்த மசோதா லோக்சபாவில் மீண்டும் நிறைவேற்றப்படும். பின்னர் இந்த மசோதாவுக்கு பாதிக்கு மேற்பட்ட மாநிலங்களின் சட்டசபைகள் ஒப்புதல் அளிக்க வேண்டும். இவை அனைத்தும் முடிந்த பிறகு அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
-
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications