ஜிஎஸ்டி அமல்படுத்துவதில் சிக்கல்..ஏப்ரலில் அமலாக வாய்ப்பில்லை: அருண் ஜேட்லி பேட்டி
வரும் நிதி ஆண்டு தொடங்கும் ஏப்ரல் 1 முதல் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்க வாய்ப்பில்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
டெல்லி: டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முடிவு ஏதும் எடுக்கப்படாமல் முடிந்தது. அடுத்த கூட்டம் பிப்ரவரி 18 ஆம் தேதி நடைபெறுகிறது.
நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவைகளுக்கு ஒரே சீரான வரி விதிப்பை அமல்படுத்தும் வகையில் (ஜிஎஸ்டி) வரி விதிப்பு முறையை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அதிகார வரம்பு தொடர்பாக தொடர்ந்து பிரச்சினை நீடித்து வந்தது. இதற்கு தீர்வு காணும் நோக்கில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் எட்டு முறை நடந்துள்ளது. இருப்பினும் முடிவு எதுவும் எட்டப்படாமலே கூட்டம் முடிவடைந்தது.

இந்த நிலையில் 9-வது முறையாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறுகையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு அதிகாரம் தொடர்பாக இன்று நாள் முழுவதும் விவாதிக்கப்பட்டது.
வரும் நிதி ஆண்டு தொடங்கும் ஏப்ரல் 1 முதல் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்க வாய்ப்பில்லை எனக் கூறினார். வரும் ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வரலாம் என நம்பிக்கை உள்ளதாகவும் அருண் ஜெட்லி கூறினார். மேலும், இந்த கவுன்சில் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டவில்லை.
இரட்டை கட்டுப்பாட்டு பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகளிடம் ஒருமித்த கருத்து இல்லை. கடல் மார்க்கமாக நடைபெறும் வர்த்தகத்தின் மீது வரி விதிக்கும் உரிமை மாநில அரசுக்கு தரப்படும்.
ஜி.எஸ்.டி. மசோதாவில் வரி விகிதம் மத்திய, மாநில அரசுகளால் சமமாக நடத்தப்படும். பிப். 18-ம் தேதி அடுத்த கவுன்சில் கூட்டம் நடக்கும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications