For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத் தேர்தல் முடிவுகள்: 'நோட்டா'-வுக்கு வாக்களித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

By BBC News தமிழ்
|
காங்கிரஸும் வேண்டாம், பாஜகாவும் வேண்டாம்: நோட்டாவுக்கு வாக்களித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா?
Getty Images
காங்கிரஸும் வேண்டாம், பாஜகாவும் வேண்டாம்: நோட்டாவுக்கு வாக்களித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டபேரவை வாக்குப்பதிவு முடிவுகள் நேற்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்ட நிலையில், குஜராத் மாநிலத்தில் நோட்டாவுக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்றால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கடைசியாக இருக்கும் நோட்டா என்ற சின்னத்தில் வாக்காளர்கள் வாக்குகளை செலுத்தலாம்.

நடந்து முடிந்த குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச சட்டபேரவை வாக்கு எண்ணிக்கையில் குஜராத் மாநிலத்தில் மட்டும் சுமார் 5 லட்சத்து 51 ஆயிரத்து 615 பேர் வாக்களித்துள்ளனர்.

காங்கிரஸும் வேண்டாம், பாஜகவும் வேண்டாம்: நோட்டாவுக்கு வாக்களித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா?
Getty Images
காங்கிரஸும் வேண்டாம், பாஜகவும் வேண்டாம்: நோட்டாவுக்கு வாக்களித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் நோட்டாவிற்கு விழுந்த வாக்குகளின் சதவீதம் மட்டும் 1.8%. இதன்மூலம் அதிக வாக்குகளை பெற்ற மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை நோட்டா பெற்றுள்ளது.

இமாச்சல பிரதேச தேர்தலிலும் சுமார் 34 ஆயிரத்து 232 வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.

நூலிழையில் வெற்றியை தவறவிட்ட காங்கிரஸ்

குஜராத்தில் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளில், 16 தொகுதிகளில் 3000-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவிடம் காங்கிரஸ் தோல்வியை தழுவியுள்ளது.

இந்த 16 தொகுதிளிலும் பாஜகவை வீழ்த்த காங்கிஸுக்கு தேவையான வாக்குகளை காட்டிலும் நோட்டாவுக்கு பதிவான வாக்குகள் அதிகம்.

அதன் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தொகுதி

வாக்குகள் வித்தியாசம்

நோட்டா

போதாட்

906

1334

தபோய்

2839

3046

தோல்கா

327

2347

ஃபதேபுரா

2711

4573

கரியாதர்

1876

1557

கோத்ரா

236

3050

ஹிமத் நகர்

1712

3334

கம்பத்

2318

2731

மட்டர்

2406

4090

போர்பந்தர்

1855

3433

பிராந்திஜ்

2551

2907

ராஜ்கோட் (கிராமப்புறம்)

2179

2559

அம்ரெத்

1883

3710

வாக்ரா

2370

2807

விஜாபுர்

1164

1280

விஸ்நகர்

2869

2992

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
BJP has won in Himachal Pradesh and Gujarat but the number of people who have chosen NOTA in Modi's state is a big shock for the ruling party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X