கொரோனா தீவிரம்...குஜராத் மருத்துவமனைகளில் வரிசைகட்டி நிற்கும் ஆம்புலன்ஸ்கள் - காரிலேயே இறந்த நோயாளி

குஜராத் மாநிலத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாமல் ஆம்புலன்ஸ் வாகனங்களில் நோயாளிகள் காத்திருக்கும் அவல நிலை உருவாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: மருத்துவமனை வாசலில் வரிசை கட்டி நிற்கும் ஆம்புலன்ஸ்கள், காரில் உயிருக்கு போராடும் கொரோனா நோயாளிகள் என குஜராத் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. படுக்கை வசதி பற்றாக்குறை காரணமாக அரசு மருத்துவமனை வாசலில் நீண்ட வரிசையில் ஆம்புலன்ஸ்கள் நோயாளியுடன் காத்திருக்கும் சூழ்நிலையில் காரில் காத்திருந்த கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இரட்டை மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. நாளொன்றுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Gujarat civil hospital assess the patients waiting in ambulances as per their medical condition

குஜராத் மாநிலத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. முதல் அலையின்போது மருத்துவமனையில் சிறப்பு கொரோனா மையம் அமைக்கப்பட்டு சிறப்பான வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வர, கொரோனா மையங்கள் அகற்றப்பட்டன. அங்கு பணிபுரிந்த மருத்துவர்கள், செவிலியர்கள் வழக்கமான பணிக்கு மாற்றப்பட்டனர். லேசான அறிகுறி உள்ளவர்கள் வீட்டிலேயே சிகிச்சை மேற்கொள்ளலாம் என அரசு தெரிவித்தது.

தற்போது ஜெட் வேகத்தில் அதிகரிப்பதால் உடனடியாக கொரோனா மையத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஆக்சிஜனும் போதுமான அளவிற்கு இருப்பு வைக்க முடியவில்லை. இதற்கிடையில் மருத்துவமனையில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் இல்லாமல் டாக்டர்கள் திண்டாடி வருகின்றனர். குஜராத் மாநிலத்தில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை நீதிமன்றம் கண்டித்துள்ளது.

அங்கு உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதால் இடுகாடுகளில் சடலங்கள் குவிந்து வருகின்றன. பல நேரங்களில் வெளியிலேயே அவசரம் அவசரமாக எரிக்கப்படும் அவல நிலையும் உருவாகியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் நாள்தோறும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு வெளியில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றது அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து அந்த மருத்துவமனையில் சூப்பிரென்டு ஜே.வி. மோடி கூறுகையில் ''மெடிசிட் கேம்பசில் 2120 படுக்கை வசதிகள் உள்ளன. தற்போது வரை 2008 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு மணி நேரத்திற்குள் 45 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்ததை நாங்கள் கவனித்தோம் என்றார். வரும் நாட்களில் இதுபோன்ற நிலை ஏற்பட்டால் கடும் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
என்ற அச்சம் எழுந்துள்ளது.
என்ற அச்சம் எழுந்துள்ளது.

இது குறித்து அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ள குஜராத் அரசு சிவில் மருத்துவமனைக்கு வெளியே காணப்பட்ட கொரோனா நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் வரிசையில் நிற்க வைக்கப்பட்டு நோயாளிகளை அனுமதிப்பது நெறிமுறைகளின்படி மேற்கொள்ளப்படுகிறது, அதை நிராகரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

நிலைமையைக் கையாள்வதில் சிவில் மருத்துவமனையின் செயல்திறனுடன் வரிசையை இணைப்பது நியாயமற்றது என்றும் அரசு தெரிவித்துள்ளது.

நகரின் அசர்வா பகுதியில் உள்ள சிவில் மருத்துவமனை வளாகத்தில் கொரோனா நோயாளிகளுக்காக 1,200 படுக்கைகள் கொண்ட ஒரு பிரத்யேக மருத்துவமனை உள்ளது. கடந்த வாரம் முதல், கொரோனா வைரஸ் நேர்மறை நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸின் நீண்ட வரிசை மருத்துவமனை கட்டிடத்திற்கு வெளியே காணப்படுகிறது என்று அம்மாநில உயர்நீதிமன்றம் கண்டித்திருந்தது.

இது குறித்து கருத்து கூறியுள்ள சிவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜே.வி. மோடி, ஒவ்வொரு நோயாளியையும் காப்பாற்ற சிவில் மருத்துவமனை தன்னால் முடிந்தவரை முயற்சிக்கிறது. வரிசைக்கும் சிவில் மருத்துவமனையின் செயல்திறனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனை வாசலில் காரில் காத்திருந்த போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உயிரிழந்த கொரோனா நோயாளிகளின் உடல்களை எந்தவித பாதுகாப்பும் இன்றி திறந்த வெளியில் எரிக்கப்படுவதால் மக்களிடையே அச்ச உணர்வும் அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+