குஜராத்தில் படேல் சமூகத்தினர் மீது தடியடி... பரவிய கலவரத்தில் உள்துறை அமைச்சர் வீட்டுக்கு தீ வைப்பு
அகமதாபாத் : குஜராத் மாநிலத்தில் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்திய படேல் சமூகத்தினர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில் இன்று மாநிலம் முழுவதும் முழு அடைப்புக்கு பட்டேல் சமூகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

படேல் சமூகத்தினர் குஜராத் மக்கள் தொகையில் சுமார் 12 சதவீதம் உள்ளனர். மேலும் அந்த சமூகம் ஆளும் பா.ஜ.க. கட்சிக்கு ஆதரவாளர்களாக இருந்து வருகிறார்கள். ஆனால் தற்போது அவர்கள், வேலை வாய்ப்பு மற்றும் பல்கலைக்கழக இடங்களுக்காக மற்ற சாதியினருடன் போட்டியிட வேண்டியுள்ளது. எனவே தங்களை ஓ.பி.சி. பிரிவில் சேர்த்து அதிக இடஒதுக்கீடு தரவேண்டும் என ஹர்திக் படேல் என்ற 21 வயது இளைஞரின் தலைமையின் கீழ் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மாநில முதல்வர் ஆனந்திபென், இந்த இடஒதுக்கீடு கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.
இந்நிலையில் போராட்டத்தின் ஒரு பகுதியாக, நேற்று அகமதாபாத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்ட மாபெரும் மாநாடு மற்றும் பேரணி நடத்தப்பட்டது. இதன் முடிவில் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திய ஹர்திக் படேல் 48 மணிநேர உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தார்.
ஆனால், இதற்கு காவல்துறை அனுமதி வாங்கப்படவில்லை. எனவே அவர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். மேலும் அந்த மாநாட்டு பந்தலில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
இந்நிலையில், ஹர்திக் படேல் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து குஜராத்தில் பல இடங்களில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஆமதாபாத், சூரத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ரஜனி படேல் வீட்டை போராட்டக்காரர்கள் தாக்கியதுடன், தீ வைத்தனர்.
கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து மேக் ஷானா பகுதியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக கூடியதாக ஹர்திக் படேல் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து மாநிலத்தில் கலவரம் பரவி வருகிறது. இதனையடுத்து அனைவரும் அமைதி காக்க வேண்டும் என முதல்வர் ஆனந்திபென் படேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications