இந்து பெண்களை காதலித்து ஏமாற்றும் 'லவ் ஜிகாத்..' கடும் நடவடிக்கை எடுப்பேன்: விஜய் ரூபானி திட்டவட்டம்
காந்திநகர்: இந்து பெண்களைக் காதலிப்பது போல நடித்து அவர்களைச் சிக்க வைத்து, மதமாற்றம் செய்யும் நபர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.
இந்து பெண்களை மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் காதலிப்பது போல நடித்து ஏமாற்றுவதாக இந்து அமைப்பை நடத்தி வருவோர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். அதேபோல பாஜகவும் இதே குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.
இந்நிலையில், காதலிப்பது போல நடித்து இந்து பெண்களைச் சிக்க வைக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி எச்சரித்துள்ளார்.

முதல்வர் விஜய் ரூபானி
குஜராத் மாநிலத்தில் பழமையான சமூகங்களில் ஒன்று மால்தாரி. ஆடு, மாடு போன்ற கால்நடைகளை மேய்ப்பதே இந்த சமூகத்தினரின் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இந்நிலையில், குஜராத்தின் வாசிஹோனாதேவி பகுதியில் மால்தாரி சமூகத்தின் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி கலந்து கொண்டார். அப்போது பசுவதை, லவ் ஜிகாத் குறித்து குஜராத் அரசு எடுத்த நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டார்.

பசுவதை தடை சட்டம்
அந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய் ரூபானி, "பசுவதையைத் தடுக்க குஜராத் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. பசுவதை நடப்பதில்லை என்பதை உறுதி செய்ய எனது அரசு பல்வேறு கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதியில் மழை அளவு குறைந்தது. இதனால் பசுக்களுக்குச் சரியான முறையில் தீவனம் கிடைக்காத சூழல் ஏற்பட்டது. அப்போது மானிய விலையில் தீவனங்களை அளித்துப் பல லட்சம் பசுக்களைப் பட்டினியிலிருந்து காப்பாற்றினோம். பசுவதை, நில அபகரிப்பு, செயின் பறிப்பு என எந்த குற்றத்தில் ஈடுபட்டாலும் சரி, அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்பதை நான் உறுதி அளித்துக் கொள்கிறேன்.

லவ் ஜிகாத்
அதேபோல இந்து பெண்களைக் காதலிப்பது போல நடித்து அவர்களைச் சிக்க வைத்து, ஓடி போகும் நபர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதைத் தடுக்கவே நாங்கள் 'லவ் ஜிகாத்' என்ற புதிய சட்டத்தையும் கொண்டு வந்தோம். இந்து பெண்களைக் காதல் என்ற பெயரில் இழுத்து செல்பவர்களுக்கு எதிராக பாஜக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். அதில் யாருக்கும் எந்தவொரு சந்தேகமும் வேண்டாம்" என்றார்.

அமைச்சர் கருத்து
இந்த நிகழ்ச்சியில் பேசிய அம்மாநில அமைச்சர் பிரதீப்சிங் ஜடேஜா, "பசு வதைக்கு எதிராகக் கடுமையான சட்டத்தைக் கொண்டு வருவதில் முதல்வர் ரூபானி முனைப்புடன் இருந்தார். இதனால்தான் நாங்கள் சட்டம் கொண்டு வந்தோம். பசுவதை செய்பவர்கள் மீது எவ்வித அனுதாபமும் காட்டத் தேவையில்லை என்பதில் முதல்வர் ரூபானி திட்டவட்டமாக இருந்தார்" என்றார்.

லவ் ஜிகாத் சட்டம் என்றால் என்ன
லவ் ஜிகாத் என்ற இந்த சட்டம் குஜராத் சட்டசபையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் காதல் என்ற பெயரில் இந்து பெண்களை மதமாற்றம் செய்வது தடுக்கப்படும் என அப்போது குஜராத் அமைச்சர்கள் தெரிவித்திருந்தர். குஜராத் மட்டுமின்றி உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, கர்நாடகா ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களிலும் அம்மாநில அரசுகள் லவ் ஜிகாத்தை தடை செய்யும் வகையில் புதிய சட்டத்தைக் கொண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications