குஜராத்தில் பயங்கரம்.. தாய், மகள் படுகொலை.. உடலை 14 மூட்டை சிமெண்ட் போட்டு மூடிய கொடுமை!
அகமதாபாத்: குஜராத் மாநிலம் வதோதராவில் மூன்று வயது குழந்தை மற்றும் அவரது தாயை கொடூரமாக கொன்ற தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
மன்சூ பாபரோ என்ற பெண்ணும் அவரது கணவர் திலிப் என்பவரும் சேர்ந்து இந்த கொலைகளை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த 17 ம் தேதி, நந்தா சிசோடியா (48) என்ற பெண் தனது மூன்று வயது மகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை இதனைத் தொடர்ந்து, காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், லிம்கேடா பகுதி அருகே உள்ள ஹடாப் ஏரிப் பகுதியில் மூன்று வயது சிறுமியின் உடல் கிடந்தது தெரியவந்தது.
இதற்கிடையே, அப்பகுதியில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில், மன்சூ பாபரோ - திலிப் ஆகியோரது வீட்டிற்கு தாய் மற்றும் மகள் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில், கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.
அவர்கள் அளித்த தகவலின் படி, தாய் நந்தா சிசோடியாவின் உடலை மிகக் கொடூரமாக புதைத்துள்ளனர். அதாவது ஒரு வாட்டர் டேங்க்கில் உடலைப் போட்டு அதன் மேலே 14 மூட்டை சிமெண்ட்டைக் கொட்டி பூசி விட்டனர். உடல் துர்நாற்றம் வெளியே வராமல் இருக்க இவ்வாறு செய்துள்ளனர்.
போலீஸார் அந்த இறுகிப் போன கான்க்ரீட்டை உடைத்து பெண்ணின் உடலை வெளியே எடுத்தனர். எதற்காக இந்தக் கொடூரக் கொலை என்று தெரியவில்லை.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications