குஜராத் தேர்தல்: டிசம்பர் 1, 5-ஆம் தேதிகளில் சட்டப் பேரவைக்கு வாக்குப்பதிவு
குஜராத் சட்டப் பேரவைக்கு டிசம்பர் 1,5-ஆம் தேதிகளில் தேர்தல் இரண்டு கட்டங்களாகத் தேர்ல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.,
குஜராத்தில் 4.9 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 2.53 கோடி. பெண் வாக்காளர்கள் 2.37 கோடி பேர். கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலில் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 4.6 லட்சம் அதிகரித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 தொகுதிகள் உள்ளன. இவற்றில் 13 தொகுதிகள் ரிசர்வ் செய்யப்பட்டவை. 2017-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 99 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 77 இடங்களையும் கைப்பற்றின.
குஜராத் மாநில சட்டப் பேரவையின் தற்போதைய பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி நிறைவடைகிறது.
குஜராத் தேர்தலுக்கான அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். அனைத்து வாக்குச் சாவடிகளும் தரைத்தளத்திலேயே அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அவர் குறிப்பிட்டார்.
மாநிலம் முழுவதும் 51 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என அவர் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













Click it and Unblock the Notifications