பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட பகவத் கீதை.. குஜராத் அரசு அறிவிப்பு.. என்ன காரணம் தெரியுமா?
காந்தி நகர்: குஜராத்தில் 6-12ம் வகுப்பு வரையிலான பள்ளி பாடத்தில் பகவத் கீதையை பாடத்திட்டங்களில் ஒன்றாக சேர்க்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான குஜராத் அரசு முக்கியமான சுற்றறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. குஜராத் அரசின் இந்த முடிவை காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வரவேற்று உள்ளன.
குஜராத் மாநில அரசின் அறிவிப்பு நேற்று மாலை வெளியானது. அந்த சுற்றறிக்கையில், இந்தியாவின் கலாச்சரம், பழங்கால வரலாறு, நமது பாரம்பரியம் ஆகியவற்றை பறைசாற்றும் விதமாக இந்த நூல் இருப்பதால், அதை பாடத்திட்டத்தில் சேர்ப்பதாக குஜாரத் அரசு தெரிவித்துள்ளது.

குஜராத் கீதை
மேலும் இந்தியாவின் கலாச்சாரம் அறிவாற்றல், பழம்பெருமை ஆகியவற்றை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். மாணவ, மாணவியர் இடையே புனிதமான கருத்துக்களை ஏற்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. பகவத் கீதையின் மதிப்புகள், கோட்பாடுகள் மற்றும் முக்கியத்துவம் என்பவை எல்லா மதத்தினராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

பகவத் கீதை குஜராத்
6ம் வகுப்பில் இருந்து கீதை தொடர்பான பாடங்கள் கற்றுத்தரப்படும். ஒவ்வொரு வருடமும் பாடத்திட்டத்தில் கீதையின் பல்வேறு பகுதிகள் இடம்பெறும். அதன் சாராம்சங்கள் இடம்பெறும். இதன் மூலம் கீதை மீதான மாணவர்களின் ஆர்வம் அதிகரிக்கும் என்று குஜராத் அரசு தெரிவித்துள்ளது. இது குஜராத் மாணவர்களை நல் வழியில் சிந்திக்க வழி வகுக்கும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ஜீத்து வாகனி தெரிவித்துள்ளார்.

ஏன் இந்த முடிவு
முதலில் பகவத் கீதையின் முக்கியத்துவம் பற்றி பாடம் எடுக்கப்படும். அதன்பின் அதில் இருக்கும் மந்திரங்கள்., பாடல்கள், கட்டுரைகள் கற்பிக்கப்படும். அதை வைத்து தேர்வுகள், போட்டிகள், வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு கீதை படிப்பதற்கான ஆர்வம் தூண்டப்படும். இது தொடர்பான அனைத்து உதவிகளும் அரசு தரப்பில் வழங்கப்படும்.

கீதை சாராம்சம்
மாணவர்கள் எல்லோருக்கும் இதற்காக பகவத் கீதை வழங்கப்படும். 9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆழ்ந்த பகவத் கீதை கருத்துக்கள் பாடமாக எடுக்கப்படும். அதேபோல் ஆடியோ, வீடியோ மூலமும் பகவத் கீதை கருத்துக்கள் வகுப்பில் எடுக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ஜீத்து வாகனி தெரிவித்துள்ளார். குஜராத் அரசின் இந்த முடிவை காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வரவேற்று உள்ளன.

காரணம் என்ன?
குஜராத் காங்கிரஸ், இந்த முடிவை வரவேற்கிறோம். ஆனால் முதலில் பாஜகவினர் கீதையை படிக்க வேண்டும். மேலும் குஜராத் பள்ளிகளின் தரத்தையும் அரசு உயர்த்த வேண்டும். 18 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அவற்றை நிரப்ப வேண்டும், என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இந்த முடிவு சிறப்பானது, மாணவர்களுக்கு பெரிய பலன் அளிக்கும் என்று ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் பிரிவு தெரிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications