“மோடி” அவதூறு.. ராகுல் காந்தி பதவியை பறித்த வழக்கு! விலகுவதாக அறிவித்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி
காந்திநகர்: மோடி குறித்து அவதூறாக பேசியதாக கூறி தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றவாளி என்ற சூரத் மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைக்கக்கோரிய வழக்கில் இருந்து விலகுவதாக குஜராத் உயர்நீதிமன்ற பெண் நீதிபதி கீதா கோபி அறிவித்து உள்ளார்.
கர்நாடகா மாநிலம் கோலாரில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடியின் சாதி பெயர் குறித்து ராகுல் காந்தி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மோடி என்ற துணை பெயரை குறிப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, இந்த பெயரை துணை பெயராக வைத்து இருப்பவர்கள் எல்லாம்.. என்று ஒரு வார்த்தையை சொல்லி விமர்சித்து பேசினார்.

இதன் மூலம் மோடி சமூகத்தையே ராகுல் காந்தி இழிவுபடுத்திவிட்டதாக கூறி குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். சுமார் 4 ஆண்டுகளாக இந்த வழக்கு மீதான விசாரணை சூரத் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி மீண்டும் சூரத் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா இந்த வழக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என்று தீர்ப்பளித்தார். இதனை தொடர்ந்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக அவருக்கு 30 நாட்கள் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், 30 நாட்களில் அவதூறு வழக்கு தொடர்பாக விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு அனுமதி வழங்கியது.
இதற்கிடையே 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட காரணத்தால் எம்பி பதவியில் இருந்தே ராகுல் காந்தி நீக்கப்பட்டார். இதையடுத்து சமீபத்தில் 20 ஆண்டுகளாக அவர் வசித்து வந்த அரசு இல்லத்தையும் ராகுல் காந்தி காலி செய்தார். இந்த நிலையில் சூரத் உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைக்கக்கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி கீதா கோபி அமர்வு முன்பாக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. அப்போது இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர் பிஎஸ் சாம்பனேரி வலியுறுத்தி இருந்தார். அதே நேரம் குஜராத் அரசு வழக்கறிஞர் இந்த வழக்கை அவசர விசாரணைக்கு கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனால், இது தனிப்பட்ட புகார் என்றும், இதில் அரசு தரப்பு தலையிட வேண்டிய அவசியம் இல்லை எனவும் ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர் கூறினார். இந்த விசாரணையை தொடர்ந்து நீதிபதி கீதா கோபி வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் இந்த வழக்கை வேறொரு அமர்வுக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதியிடம் அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications