கோத்ரா ரயில் எரிப்பு.. கலவரத்தை கட்டுப்படுத்தாத மோடிக்கு குஜராத் ஹைகோர்ட் கண்டனம்!
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் போது குஜராத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்படுத்தப்படவில்லை என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
அஹமதாபாத் : கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தின் போது சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த அப்போது முதல்வராக இருந்த மோடி நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.
2002ம் ஆண்டு கோத்ரா ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் தீ வைத்து எரிக்கப்பட்டதில் 59 கரசேவகர்கள் உயிருடன் எரிந்து சாம்பலாகினர். இந்த ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பழிவாங்கும் விதமாக இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
மதக் கலவரத்திற்கு காரணமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தால் அப்போது குஜராத்தில் அசாதாரண சூழல் நிலவியது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாநில அரசும் நானாவதி கமிஷனை நியமித்தது.

சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
இதனிடையே ரயில் எரிப்பு வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும், 11 பேருக்கு மரண தண்டனையும் விதித்தது. எனினும் வழக்கில் இருந்து முக்கிய குற்றவாளிகள் 63 பேர் தப்பிவிட்டதாக புகார் எழுந்தது.

11 பேருக்கு தண்டனை குறைந்தது
இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து குஜராத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து அறிவித்துள்ளது.

பாதுகாப்பு குளறுபடி
மேலும் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் போது ரயில்வேத் துறை சார்பில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஓடும் ரயிலை தீ வைத்து கொளுத்தும் அளவிற்கு பாதுகாப்பு குளறுபடி எப்படி ஏற்பட்டது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மோடி மீது விமர்சனம்
இதே போன்று அப்போது குஜராத் மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடி ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்தத் தவறிவிட்டார் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ரயில் எரிப்பு சம்பவத்தில் உயிரிழந்த கரசேவகர்கள் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு தர அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications