குஜராத் கலவர வழக்கு.. சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் ஜாமீன் மனு தள்ளுபடி.. உடனே சரணடைய உத்தரவு
காந்திநகர்: குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கிய வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட டீஸ்டா செதல்வாட் தற்போது ஜாமீனில் வெளியில் இருக்கிறார். இந்நிலையில், இந்த ஜாமீனை குஜராத் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்திருக்கிறது.
கடந்த 2002ம் ஆண்டு குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் கலவரத்தை உருவாக்கியது. இக்கலவரத்தில் காங்கிரஸ் எம்பி ஈசான் ஜாப்ரி உட்பட பலர் கொல்லப்பட்டனர். கலவரம் தொடர்பாக வழக்கு விசாரணை தொடங்கியது. விசாரணையில் அப்போதைய குஜராத் முதல்வரும், தற்போதைய பிரதமருமான நரேந்திர மோடி மீதும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு மேற்கொண்டு விசாரிக்கையில் நரேந்திர மோடி உள்ளிட்டோர் குற்றமற்றவர் என்று கூறி வழக்கிலிருந்து அவர்களை விடுவித்தது. இதனையடுத்து கலவரத்தில் உயிரிழந்த காங்கிரஸ் எம்பி ஈசான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரியும் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாட் இருவரும் உச்சநீதிமன்றத்தை நாடினர். நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் நரேந்திர மோடி உள்ளிட்டோரை விடுவித்தது சரி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனையடுத்து குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கியதாக டீஸ்டா செதல்வாட் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் ஸ்ரீகுமார், சஞ்சீவ் பட் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மூவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் தேதி கைது செய்யப்பட்டார்கள். விசாரணையில், இந்த கலவரம் குறித்து மாநில அரசு மீது அவதூறுகளை பரப்ப அரசியல்வாதியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மறைந்த அகமது படேலிடம் இருந்து செதல்வாட் ரூ.30 லட்சம் பெற்றது தெரிய வந்துள்ளதாக மாநில அரசு கூறியது.
ஆயினும் டீஸ்டா செதல்வாட் கைது நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இதர ஜனநாயக கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
மேலும், ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையத் தலைவரும் டீஸ்டா செதல்வாட் கைதுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்நிலையில் ஜாமீன் கோரி டீஸ்டா உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த செப்டம்பரில் அவருக்கு ஜாமீன் வழங்கியது. மேலும், இந்த ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற பரிசீலனைக்கே விட்டுவிட்டது. அதுவரை டீஸ்டா ஜாமீனில் இருக்கலாம் என்றும் கூறியிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி நிர்சார் தேசாய் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணையில், குஜராத் மாநில அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டீஸ்டாவுக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். டீஸ்டாவுக்கு ஜாமீன் வழங்கினால் அவர் வழக்கின் முக்கிய ஆதாரங்களை சிதைத்துவிடுவார் என்றும் குஜராத் அரசு தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
இப்படியாக கடந்த மாதம் 21ம் தேதி விசாரணையை முடித்து, உத்தரவை ஜூலை 1ம் தேதிக்கு (இன்று) ஒத்தி வைத்தார். இந்நிலையில் இன்று உத்தரவை வாசித்த நீதிபதி, டீஸ்டாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். மேலும், டீஸ்டா செதல்வாட் உடனடியாக சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று டீஸ்டாவின் வழக்கறிஞர் மிஹிர் தாக்கூர் வலியுறுத்தியிருந்தார். ஆனால், நீதிமன்றம் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications