ஓரினச்சேர்க்கைக்கு எதிர்ப்பு.. 3 வயது மகளை ஆற்றில் வீசிவிட்டு 2 பெண்கள் தற்கொலை
ஓரினச்சேர்க்கை பிரச்சினையால் குழந்தையைக் கொன்று இரண்டு பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
Recommended Video

ஆமதாபாத்: குஜராத்தில் ஓரினச்சேர்க்கைக்கு அக்கம்பக்கத்தார் எதிர்ப்பு தெரிவித்ததால், இரண்டு பெண்கள் மூன்று வயது குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத், பாவ்லா பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான ஆஷா தாகூர். இவர் தன்னுடன் பணியாற்றிய 28 வயது பாவ்னா தாகூர் என்ற பெண்ணுடன் ஓரினத் தொடர்பு வைத்திருந்துள்ளார். இதனால் கணவர் இல்லாத நேரங்களில் அப்பெண்ணை அவர் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

இது குறித்து தெரிய வந்ததால், அக்கம்பக்கத்தார் அப்பெண்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அப்பெண்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து ஆஷா, தனது மூன்று வயது மகளுடன் தோழியை அழைத்துக் கொண்டு சபர்மதி ஆற்றுக்குச் சென்றுள்ளார். அங்கு தனது மகளை ஆற்றில் வீசிக் கொலை செய்த அப்பெண், பின்னர் தனது தோழியுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார், ஆற்றில் மூழ்கிய மூவரின் உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்பெண்கள் ஆற்றில் குதித்த இடத்தில் அவர்கள் எழுதிய கடைசிக் கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில், 'எங்களை யாரும் சேர்ந்து வாழவிடவில்லை. அதனால் இந்த முடிவை எடுத்துள்ளோம். அடுத்தப் பிறவியில் மீண்டும் சந்திப்போம்’ என எழுதப்பட்டிருந்தது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications