வேலை பிடிக்கவில்லையாம்.. குஜராத்தை இளைஞர் செய்ததை பாருங்க.. துண்டாகிப்போன 4 விரல்கள்

Subscribe to Oneindia Tamil

காந்தி நகர்: குஜராத்தை சேர்ந்த நபர் வேலையில் இருந்து விலகுவதற்காக தனது கையில் உள்ள 4 விரல்களை தானே வெட்டிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள வாரசா மினி பஜாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் மயூர் தரபாரா (வயது 32). இவர் அந்த நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார்.

gujarat computer operator

இவர் கடந்த 8 ம் தேதி போலீசில் புகார் ஒன்றை தெரிவித்தார். அந்த புகாரில், ‛‛கடந்த 8 ம் தேதி நான் எனது நண்பரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தேன். அப்போது திடீரென்று மயக்கம் ஏற்பட்டது. கண்விழித்து பார்த்தபோது கையில் இருந்த 4 விரல்கள்வெட்டப்பட்டு இருந்தது'' என்று புகாரளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் சூரத் குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது போலீசாருக்கு மயூர் தரபாராவின் மீது சந்தேகம் வலுத்தது. இதனால் அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது மயூர் தரபாரா சொன்ன தகவல் திடுக்கிட வைத்தது.

அதாவது மயூர் தரபாரா பணியாற்றும் நிறுவனம் அவரது உறவினருக்கு சொந்தமானதாகும். அந்த நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக அவர் பணியாற்றி வரும் நிலையில் அந்த பணியை அவர் விரும்பவில்லை. அதோடு பணியை விட்டு நிற்க வேண்டும் என்று அவர் விரும்பி உள்ளார்.

ஆனால் வேலையை விடுவதாக நிறுவனத்தை நடத்தும் உறவினரிடம் கூறுவதற்கு மயூரா தரபாராவுக்கு தைரியம் இல்லை. இதனால் பணியை விட்டு நிற்க ஏதாவது ஒரு காரணம் வேண்டும் என்று நினைத்த அவர் கத்தியை எடுத்து தனது இடது கையில் உள்ள 4 விரல்களையும் வெட்டி உள்ளார். அதன்பிறகு மோட்டார் சைக்கிளில் சென்றபோது மயங்கி விழுந்ததோடு, விரல்களை யாரோ துண்டித்து விட்டதாக கூறி நாடகமாடியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பொதுவாக ஊழியர்கள் வேலையை விட்டு விலகுவதற்கு உடல்நலம், குடும்ப பிரச்சினை, பொருளாதார சூழல் என பல காரணங்களை கூறுவார்கள். இல்லாவிட்டால் புதிய வேலையை தேடிவிட்டு இருக்கும் பணியில் இருந்து விலகுவார்கள். ஆனால் மயூரா தரபாரா வேலை பிடிக்காததால் அதில் இருந்து விலக தனது கையின் 4 விரல்களை வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+