கைமாறிய 12 வருட மனைவி.. குஜராத் கணவர் தந்த புகாரில் செம ட்விஸ்ட்.. அலறியடித்து ஓடிய 10 பேர்
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் மனைவியை நண்பர்களுக்குப் பணம் பெற்றுக்கொண்டு விற்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார் ஒரு கணவர்.. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது... இது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள் என்றாலும், சம்பவத்தின் அதிர்வலைகள் இன்னும் அங்கு நீங்கவில்லை.. அப்படி என்ன தான் நடந்தது? குஜராத் மாநிலத்தில்?
குஜராத்தின் பலான்பூர் நகரில் வசித்து வருபவர் நிகேஷ் பட்டேல்.. இவருக்கும் அவரது மனைவிக்கும் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில், திடீரென நிகேஷ் பட்டேல், தனது மனைவியைக் காணவில்லை என்று உள்ளூர் காவல் நிலையத்தில் பதற்றத்துடன் புகார் ஒன்றை தந்துள்ளார்.

மனைவி மாயம்
தனது மனைவி திடீரென மாயமாகிவிட்டார் என்றும், அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை, எப்படியாவது கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்றும் போலீசாரிடம் வேண்டி கேட்டுக் கொண்டார்.
அவரது புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், பெண் காணாமல் போன வழக்காகப் பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கினார்கள்.. எனவே காணாமல் போன பெண்ணை பற்றி தெரிந்து கொள்ள, கணவர் நிகேஷ் பட்டேலிடமே விசாரணையை மேற்கொண்டனர்.. அப்போது போலீசார் கேட்ட கேள்விகளுக்கு பதற்றத்துடன் பதில் சொன்னார்.. மேலும் அவரது நடத்தை மற்றும் முன்னுக்குப் பின் முரணாக அளித்த வாக்குமூலங்கள் அனைத்துமே போலீசாருக்கு அவர் மீது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தின.
தாலி கட்டிய கணவன்
இதனைத் தொடர்ந்து, போலீசார் அவரிடம் தங்களது பாணியில் தீவிர விசாரணை நடத்தியபோது, யாரும் எதிர்பாராத திடுக்கிடும் உண்மைகள் வெளிவர தொடங்கின. அதாவது காணாமல் போனதாகக் கூறப்பட்ட பெண் கடத்தப்படவோ அல்லது அவராக ஓடிப் போகவோ இல்லையாம்.. தாலி கட்டிய கணவனே, தன்னுடைய மனைவி, நண்பர்களிடம் விற்றுவிட்டது அம்பலமானது.
நிகேஷ் பட்டேலுக்கு மனைவியை கண்டாலே பிடிக்காதாம்.. எப்போது பார்த்தாலும் எரிந்து விழுந்து கொண்டும், சண்டை போட்டுக் கொண்டும் இருப்பாராம்.. இதுபோக பணத்தேவையும் அவருக்கு இருந்துள்ளது.. இதனால் தனது நண்பர்களான சஞ்சய் தாகூர், அஷோக் தாகூர் மற்றும் சச்சின் தாகூர் ஆகியோரிடம் வெறும் 50 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு, தனது 12 ஆண்டு கால மனைவியை அவர்களிடம் விற்றுள்ளார்.
ரகசிய அறையில் வலுக்கட்டாய பலாத்காரம்
பணத்தை தந்து, நண்பனின் மனைவியை வாங்கி கொண்ட அந்த நண்பர்கள், அந்த பெண்ணை ஒரு ரகசிய அறையில் வலுக்கட்டாயமாக அடைத்து வைத்துள்ளனர். அங்கு நிகேஷின் நண்பர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் அந்தப் பெண்ணுக்கு அடுத்தடுத்துப் பாலியல் வன்கொடுமைகளும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைகளும் செய்துள்ளனர்.
இப்படி ஒரு நாள் அல்லது இரண்டு நாள் அல்ல, தொடர்ந்து 7 நாட்களாக இந்த கொடூரம் நீடித்துள்ளது. அந்தப் பெண் பசியாலும் வலியாலும் அலறியபோதும், மிருகத்தனமாகப் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு நிறுத்தாமல், அந்தப் பெண் அணிந்திருந்த தங்கக் காதணிகளையும் அந்த கும்பல் பலவந்தமாக பறித்து திருடி சென்றதும் விசாரணையில் அம்பலமானது.
மனநல ஆலோசனைகள்
இதை கேட்டு அதிர்ந்த போலீசார், துரிதமாகச் செயல்பட்டு, ரகசிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்தப் பெண்ணை அதிரடியாக மீட்டனர்.. அவருக்கு தகுந்த மருத்துவ உதவியும், மனநல ஆலோசனைகளையும் தற்போது வழங்கி வருகிறார்கள்.. இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய நிகேஷ் பட்டேல் மற்றும் அவனது நண்பர்கள் உட்பட மொத்தம் 10 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை போலீஸ் சூப்பிரெண்டு கேமித், கைதான நிகேஷ் பட்டேல் ஒரு சைக்கோ மனநிலையுடன் இருக்கிறார்.. திருமணம் நடந்து 12 ஆண்டுகள் ஆனபோதிலும், வேறு சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களுடன் முறையற்ற உறவில் இருந்து வந்துள்ளார்.
சட்டப்படி விவாகரத்து
தனது மனைவியைப் பிடிக்கவில்லை என்பதால், அவரை சட்டப்படி விவாகரத்து செய்யவே முதலில் விரும்பியுள்ளார்.. விவாகரத்து செய்வதால் எந்த லாபமும் கிடைக்காது என்பதால், குறுக்கு வழியில் யோசித்து, மனைவியை நண்பர்களிடம் விற்றுப் பணம் சம்பாதிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
அதுமட்டுமல்ல மனைவியை விற்ற பணத்தைக் கொண்டு வேறொரு பெண்ணை தனது வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்து வாழலாம் என்றும் திட்டமிட்டு, இப்படியொரு அசிங்கமான காரியத்தை செய்திருக்கிறார்.. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 10 பேரிடமும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications