ஐயோ.. காப்பாத்துங்க.. குஜராத் பாலத்தின் நுனியில் தொங்கிக்கொண்டு.. உயிருக்காக போராடிய மக்கள் -வீடியோ
காந்தி நகர்: குஜராத் மோர்பி பகுதியில் கேபிள் பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
குஜராத் மோர்பி பகுதியில் கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 100ஐ தாண்டி உள்ளது. கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் 132 பேர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
தண்ணீருக்கு உள்ளே 100க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதனால் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

விசாரணை
இந்த சம்பவம் குஜராத்தை உலுக்கி உள்ளது. இந்த விபத்து தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கிரிமினல் வழக்கு பதியப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியாக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக கமிட்டி ஒன்றும் உருவாக்கப்பட்டு உள்ளது. குஜராத்தில் தேர்தல் நேரத்தில் நடந்துள்ளது இவ்வளவு பெரிய விபத்து மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
|
வீடியோ 1
இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் வெளியாகி உள்ளன. முதல் வீடியோவில் சில இளைஞர்கள் பாலத்தின் அதுவே ஜம்ப் செய்யும் காட்சிகள் பதிவாகி உள்ளன. அவர்கள் வேண்டும் என்றே குதித்து பாலத்தை ஆட்டும் காட்சிகள் பதிவாகி உள்ளன. அதேபோல் பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் அவர்கள் கால்களால் உதைக்கும் காட்சிகளும் பதிவாகி உள்ளன. பாலத்தை சேதப்படுத்தும் நோக்கில் இவர்கள் நடந்து கொண்டுள்ளனர்.
|
வீடியோ 2
இன்னொரு வீடியோவில் பாலத்தின் நடுப்பகுதி முழுமையாக கீழே மூழ்கும் முன் அதில் மக்கள் தொற்றிக்கொண்டு இருக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. காப்பாற்றுங்கள்.. காப்பற்றுங்கள் என்று இவர்கள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் கதறும் காட்சிகள் இதில் பதிவாகி உள்ளன. இப்படி தொற்றிக்கொண்டு இருந்தவர்களில் பலர் நீரில் மூழ்கிவிட்டது குறிப்பிடத்தக்கது. முழு பாலமும் தற்போது நீரில் மூழ்கிவிட்டது. பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் உள்ள நுழைவாயில் மட்டுமே வெளியே உள்ளது.

படகு
காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று மக்கள் நீரில் மிதிக்கும் வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. தற்போது அங்கு படகு மூலம் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது. தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் களமிறங்கி மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 100க்கும் மேற்பட்டோரின் உடல்கள் உள்ளே மூழ்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இவர்களை தேடும் பணி நேற்று இரவில் இருந்து நடந்து வருகிறது. ராணுவ, கடற்படை ஆகியவையும் இந்த தேடுதல் வேட்டையில் களமிறக்கப்பட்டு உள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications